என் மலர்
நீங்கள் தேடியது "Lorry Fire"
- நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்கட்டு புதூர் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது.
லாரி பழுது காரணமாக ஈரோட்டில் உள்ள பட்டறையில் பழுது நீக்கி விட்டு ஓட்டுநர் வேலுச்சாமி (42 ) என்பவர் லாரியை ஈரோட்டில் இருந்து அரச்சலூர் அருகே உள்ள வடபழனி செட்டிக்கு கொண்டு சென்ற போது, சில்லாங்கட்டபுதூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென லாரியிலிருந்து புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் வேலுச்சாமி லாரியை அப்படியே நிறுத்தி இறங்கிப் பார்த்தார். சற்று நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது. நடுரோட்டில் லாரி தீப்பிடித்து ஏரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. நல்ல வாய்ப்பாக டிரைவர் லாரிய விட்டு இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது.
- தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானி:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவருக்கு சொந்தமான லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வருகிறார்.
இவர் நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு வந்தார். நேற்று நள்ளிரவு 12.50 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு-சத்தி மெயின் ரோட்டில் ஊத்துக்காடு என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேஷ் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பினார். அந்த நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது.
பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கபப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புகழேந்தி தலைமையில் பவானி மற்றும் ஈரோட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
- கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
தாம்பரம்:
ஐதராபாத்தில் இருந்து, பல்லாவரம் அடுத்துள்ள நாகல்கேணியில் உள்ள தனியார் நிறுவன குடோனுக்கு இன்று அதிகாலை கார்களுக்கு பயன்படுத்தும் பெயிண்ட் தயாரிப்பதற்காக 18 டன் மூல பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி வந்தது.
லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இர்பான்(35) என்பவர் ஓட்டிவந்தார். நாகல்கேணி அருகே வந்த போது கண்டெய்னர் லாரி மீது தாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியது. இதில் மின்கம்பி அறுந்து லாரியின் மீது விழுந்து தீப்பற்றியது.
இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த மூலப்பொருட்கள் மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் இர்பான் உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.