search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love Couple Suicide"

    • குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது.
    • ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    காதல் ஜோடி

    இதில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் தங்கியிருந்த அறையில் இருந்து காணாமல் போயினர். இதுகுறித்து நிறுவன மேலாளர் விஜிநாதனிடம் கூறிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் சிலர் தேட சென்றனர். ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருவரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    தூக்கு போட்டு தற்கொலை

    இந்த நிலையில் நேற்று பகல் அதே மில்லில் பணியாற்றும் ஆதித்யதாஸ் என்பவர் அருகில் உள்ள காலி இடத்தில் சென்றபோது அங்கிருந்த வேப்ப மரத்தில் காதலர்கள் இருவரும் ஒரே துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த ஆதித்யதாஸ் அதே மில்லில் பணியாற்றும் இறந்த பெண்ணின் மூத்த சகோதரி சாலோ குமாரியிடம் சென்று கூறினார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    விசாரணை

    இதனிடையே சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு நிறுவன மேலாளர் தகவல் அளித் தார். அதன்பேரில் போலீ சார் விரைந்து வந்து இரு வரது உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காதலர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர்.
    • பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே வீட்டிற்கு வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.

    இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

    இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி விரக்தியில் இருந்தனர்.

    நேற்று பகீரத்தின் பெற்றோர் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே, வீட்டிற்கு வந்தார்.

    அங்கு காதலர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

    ஊருக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஓசூர் அருகே எதிரெதிரே வீட்டை சேர்ந்தவர்கள் காதலித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாவரபந்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமப்பா. இவரது மகன் ஏம்மண்ணா (வயது 26). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது வீட்டின் எதிரே சூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரம்மா (21) என்ற மகள் உள்ளார்.

    எதிரெதிரே வீடு என்பதால் ஏம்மண்ணாவும், சூரம்மாவும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனால் 2 பேரும் சகஜமாக பழகுவதாக அவர்கள் பெற்றோர்கள் எண்ணியதாக தெரியவந்தது.

    2 பேரும் கடந்த 2 வருடங்களாக வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினருக்கு சிறு தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனால் இரு குடும்பத்தாரும் கடந்த சில நாட்காளக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் தங்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களோ? என்ற மன வருத்தத்தில் இருந்தனர்.

    நேற்று இரவு 10 மணியளவில் இருவீட்டாரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். ஆனால் காதல் ஜோடியான ஏம்மண்ணாவும், சூரம்மாவும் வீட்டில் இருந்து வெளியேறினர்.

    அவர்கள் அருகே உள்ள அனுமப்பாவுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புளியமரத்தில் காதல்ஜோடி ஏம்மண்ணாவும், சூரம்மாவும் ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் காதல் ஜோடி 2 பேரும் மரத்தில் பிணமாக தூங்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களை கட்டிபிடித்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். காதல் ஜோடி 2 பேரும் பெற்றோர்கள் தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்று எண்ணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எதிரெதிரே வீட்டை சேர்ந்தவர்கள் காதலித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    திருமணம் தள்ளிப்போனதால் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது திருப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருப்பூர்:

    மதுரை உசிலம்பட்டி கட்டத்தேவன் பட்டியை சேர்ந்தவர் தவமணி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செரங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினரான மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி (26) திருப்பூர் நல்லூர் அருகே உள்ள பொன்முத்து நகர் 1-வது வீதியில் உள்ள அவருடைய அக்கா வீட்டில் தங்கி ஒர்க்‌ஷாப்பில் வேலைபார்த்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதாலும், அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென இறந்து விட்டார். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் காதல்ஜோடி மனவேதனை அடைந்தனர்.

    இந்தநிலையில் அருண்பாண்டி தங்கி இருந்த வீட்டில் திவ்யாவும், அருண்பாண்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் தள்ளிப்போனதால் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
    திருக்கழுகுன்றம் அருகே பாலாற்று பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஆனூர் பாலாற்று பகுதியில் இன்று வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடைந்தனர். அருகில் வி‌ஷபாட்டில் கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருக்கழுகுன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவர்கள் காதல் ஜோடியான திருக்கழுகுன்றத்தை அடுத்த எலுமிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் (19), சவுமியா (17) என்பது தெரிந்தது.

    இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

    இந்தநிலையில் பிரதீப்ராஜும், சவுமியாவும் பாலாற்று பகுதியில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரதீப்ராஜ் பேண்ட் மியூசிக்கராவார். சவுமியா பிளஸ்-2 முடித்துள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×