என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "making"
- ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது.
- இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பெருமாளை வணங்கும் பக்தர்கள் 10-நாட்களுக்கு விரதம் இருந்து பரமபத வாசல் வழியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பொன் வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ராசிபுரம் ஜன கல்யாண் இயக்கத்தினர் லட்டு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இதன்படி 32-வது ஆண்டாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யாண் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக 1000 கிலோ கடலை மாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், 5 கிலோ, திராட்சை 25 கிலோ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லட்டுகள் தயாரித்து வருகின்றனர். இந்த பணியில் 25-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஜன கல்யாண் இயக்க தலைவர் எஸ்.எம்.ஆர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி, ராகவன், ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
- வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
நெல்லை:
நெல்லை அரசு அரங்காட்சியகத்தில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு எக்ஸ்ப்ளோர் மழழையர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வண்ணத்தாளில் தேசிய கொடி தயாரிக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது.
மேலும் அருங்காட்சியத்தில் உள்ள ஊமைத்துரை கூடத்தில் ஊமைத்துரை வரலாறு மற்றும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வீடியோக்கள் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வீடியோக்களையும், அருங்காட்சியகத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி செய்தி ருந்தார்.
- கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
- நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
நாமக்கல்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்- 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு சாா்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், 2021-22 ம் ஆண்டுக்கு சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாா் செய்யும் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
கடந்த ஆட்சியில் பச்சை வண்ணத்தில் இருந்த சைக்கிள்கள் தற்போது நீல வண்ணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர், சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வாரியாக மாணவா்களுக்கு வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
- இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
பவானி:
பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.
பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்