என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

    • பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான மெகா கூட்டணி அமைக்கவே தி.மு.க. விரும்புகிறது.
    • பா.ஜனதாவை விட காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வருவதையே கமல் விரும்புகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுக்க தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியிலும், பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே இரு கட்சி தலைவர்களும் கூறி வருகிறார்கள்.

    பா.ஜனதாவை எதிர்க்கும் எல்லா கட்சிகளுமே இந்த கூட்டணியில் இடம் பெறவே விரும்புகின்றன. கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சி இந்த தேர்தலில் கூட்டணி என்ற முடிவுக்கு வந்து விட்டது. சமீபத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அண்ணா நகரில் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கமலிடம் கூட்டணி பற்றி கேட்டபோது, கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை என் பயணத்தை தெரிந்து கொண்டாலே உங்களுக்கு புரிய வரும் என்று கூறினார்.

    இந்த நிலையில் தனது கட்சியை சேர்ந்த 250 பேருடன் இன்று டெல்லியில் ராகுல் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

    ராகுல் அழைப்பின் பேரில் கமல் கலந்து கொண்டாலும் இது அரசியல் கூட்டணிக்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது.

    ஏனெனில் பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான மெகா கூட்டணி அமைக்கவே தி.மு.க. விரும்புகிறது. அந்த வகையில் 2 சதவீதம் வாக்கு வங்கியை கொண்டுள்ள கமல் கட்சியும் தங்கள் பக்கம் வர வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த அழைப்பு பின்னணியும் இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதாவை விட காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வருவதையே கமல் விரும்புகிறார். எனவே காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கவே இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

    கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் தொகுதி பங்கீடுதான் யோசிக்கப்படுவதாகவும் கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.

    குறைந்தது 2 தொகுதிகளும் ஒரு மேல்சபை இடமும் வேண்டும் என்று கமல் தரப்பு வலியுறுத்துவதாகவும், ஆனால் ஒரு தொகுதி, ஒரு மேல்சபை பதவி தரலாம் என்று கூறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

    இருப்பினும் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தென் சென்னை அல்லது கோவையில் போட்டியிடவே அவர் விரும்புகிறாராம்.

    • கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரசுடன் கை கோர்த்து குறிப்பிடத்தக்க இடங்களை பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
    • காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கொண்டு 2 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியையே தழுவினார்.

    தனித்து நின்று போட்டியிட்டு தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாது என்கிற நிலையிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளது. இதனால் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அரசியலை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார்.

    கட்சி தொடங்கிய நாள் முதல் பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தே கமல்ஹாசன் பயணித்து வருகிறார். தனது அறிக்கைகள், டுவிட்டர் பதிவுகள் மூலமாக அவ்வப் போது பாரதிய ஜனதா அரசின் திட்டங்களை காட்டமாக விமர்சிப்பதும் கமலின் வழக்கம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் நேருக்கு நேர் மோதலிலும் அவர் ஈடுபட்டார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனை எதிர்த்து களம் கண்ட கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக களமாட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதற்காக காங்கிரசுடன் கைகோர்க்க அவர் திட்டமிட்டு உள்ளார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றது.

    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று பலத்தை காட்டியது. வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இதே அளவுக்கு தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு அந்த கட்சி முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறது.

    கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரசுடன் கை கோர்த்து குறிப்பிடத்தக்க இடங்களை பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கொண்டு 2 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தியும் கமல்ஹாசனும் எப்போதும் நெருங்கிய நட்புடன் இருப்பவர்கள். இருவரும் சந்தித்து கொள்ளும் நேரங்களில் பல்வேறு விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசிக் கொள்வது உண்டு. அந்த வகையில் டெல்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் கடந்த 24-ந்தேதி பங்கேற்றார்.

    அப்போது டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கமல்ஹாசன் பேசுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியது. இது கமல்ஹாசனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் இந்த நடைபயணத்தின் போது பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டே நடந்து சென்றதையும் காண முடிந்தது.

    இந்த ஒற்றுமை நடைபயணம் முடிந்த பின்னர் ராகுல்காந்தி, கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். இதனை ஏற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கமல்ஹாசன் சென்றார். அப்போது தனது ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றதற்காக கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    பின்னர் ராகுலின் இல்ல வளாகத்தில் இருவரும் நடந்து சென்றபடியே சுமார் ஒரு மணி நேரம் வரையில் உரையாடினார்கள். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி ராகுலும், கமல்ஹாசனும் பரபரப்பாக பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அனைத்து மாநில கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ராகுல்-கமல்ஹாசன் இருவரும் விரிவாக பேசியுள்ளனர். இந்திய அரசியல் களத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்கள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக கருத்துகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டர்.

    பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டில் நிலுவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசி உள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர் நலன் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர்.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் பலம் வாய்ந்த கூட்டணியாகவே விளங்கி வருகிறது. இந்த கூட்டணியில் கமல்ஹாசனும் சேரும் பட்சத்தில் அது வலுவான கூட்டணியாக மாறும் என்பதே ராகுலின் கணிப்பாக உள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரசுடன் கைகோர்த்து பாரதிய ஜனதாவை வீழ்த்த தயாராகி வருகிறது என்றே அரசியல் நோக்கர்களும் கணித்து உள்ளனர்.

    • தேர்தலை சந்திக்க நாம் முன் கூட்டியே தயாராக வேண்டும்.
    • பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் விவாதித்தார்.

    இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் தொகுதி பிரச்சினைகளை முன் நிறுத்தி தீவிரமாக செயலாற்றுங்கள். இது போன்ற கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். தேர்தலை சந்திக்க நாம் முன் கூட்டியே தயாராக வேண்டும்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    "ஒற்றுமையை" வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் "பாரத் ஜோடோ யாத்திரையில்" பங்கேற்பது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு முடிவை எடுத்த கமல்ஹாசனுக்கு பாராட்டு, யாத்திரையில் பங்கேற்ற நிகழ்வானது, "பெருமை மிகு இந்தியன்" என்று தன்னைக் குறிப்பிடும் தலைவர் அவர்கள், தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போது கட்சியின் எல்லைகளைக் கடந்து களத்தில் நிற்பார் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இருந்தது.

    கடந்த காலங்களில் பாபர் மசூதி இடிப்பு, காவிரிப் பிரச்னை, ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தபோது மய்யத்தின் தலைவர், தேசநலனை முன்னிறுத்தும் தனது கருத்தை உரத்தகுரலாக எழுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கமல்ஹாசன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    • மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் டெல்லியில் நடந்த போது அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நடை பயணத்தின் போது பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் பேசினார். இதில் தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களை கவுரவப்படுத்த கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார்.

    இதன்படி டெல்லி சென்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சுமார் 300 பேர் கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராடுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது.

    மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும். இதனை நிலை நாட்டும் வகையில் தான் ராகுலின் யாத்திரை அமைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா நடத்தும் மத அரசியல் எடுபடாது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் என்னை பின்பற்றுங்கள்.

    தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

    அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இந்த அனுமதி கிடைத்தால் ஜல்லிக்கட்டை நடத்த தயாராக உள்ளோம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, நிர்வாக குழு உறுப்பினர்கள் அருணாசலம், செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, நாகராஜ், அர்ஜுன் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தமிழ்நாட்டின் தலைநகரில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் பல்வேறு இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதில், அடையாறு, கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எங்குமே கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்குள்ள நீர் எந்த வகை உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

    இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாசடையாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அதேசமயம், பொதுமக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் யாத்திரையில் டெல்லி சென்று பங்கேற்ற கமல்ஹாசன், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தனியாகவும் விவாதித்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது. இந்த 2 கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    மற்ற கட்சிகளில் நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. பா.ம.க. போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் நாளை (23-ந்தேதி) காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் யாத்திரையில் டெல்லி சென்று பங்கேற்ற கமல்ஹாசன், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தனியாகவும் விவாதித்தார்.

    இதன்மூலம் நான் எந்த பக்கம் இருக்கிறேன் என்பதை கமல்ஹாசன் 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

    இதன்மூலம் நாங்கள் பிரித்த ஓட்டுகளே பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான த.மா.கா. யுவராஜாவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி விவாதிப்பதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகிகளையும் கமல்ஹாசன் சென்னைக்கு அழைத்துள்ளார். அவர்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும்.
    • தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், பொருளாளர் பானுமதி, துணைச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

    ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்றும் தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் மாடசாமி, சரவணகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
    • கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கமல் அறிவிப்பார்.

    * அதிமுக இரண்டாக உடையவில்லை, நான்காக உடைந்துள்ளது.

    * கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
    • மக்க​ளுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம்.

    சென்னை:

    கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:

    * செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பின் முடிவை அறிவிப்போம்.

    * மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார்.

    அப்போது கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் நேரில் ஆதரவு கேட்டார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார்.

    இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெரியாரின் பேரனும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யும்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி அருணாசலம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழுபலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனைகள் அற்ற ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.

    இந்தியாவின் பன்முகத்துவத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.

    ஜனநாயக சக்திகளின் குரல்வளைகள், கருத்துரிமைகள் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.

    இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    • தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

    மதுரை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டர்களில் "ஆதரவு ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு, இந்த மாதிரி நேரத்தில் நம்மவர் சொல்லுற வார்த்தை பார்த்துக்கலாம். தனியே களம் காண்போம், நம்பிக்கையே நம் பலம்" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கமல் அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட வேண்டும் என்று கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
    • காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து நேற்றுமுன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    ×