search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage"

    • கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
    • 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் சொத்துமதிப்பு ரூ.1728 கோடி முதல் ரூ.2100 கோடி வரை இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரு படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், இசை நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம் பாடல் பாடுவதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
    • உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்.

    தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.

    இந்த நிலையில், தன்னை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில், 30ம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இச்சிதறலில் உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
    • 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    சென்னை:

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.

    இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

    • கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
    • கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

    தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

    இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ந் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.
    • The View, KTTV, Fox உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்க இதழான தி சன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

    இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடந்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தி சன் இதழ் தெரிவித்துள்ளது.

     

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

    • ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.

    சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.

    இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.

    • முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர்
    • வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அங்குவந்து திருமணம் செய்து கொண்டனர்.

    உலகில் கலாச்சாரங்கள் மட்டும் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் திருமணம் என்பது அனைத்து நாட்டு மக்களிடையேயும் பொதுவாக காணப்படும் வழக்கம். மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது.

    இந்த முறைப் படி திருமண சடங்குகளில் மணமகன் - மணமகள், மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார், விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் என அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள்.

    கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இந்த வினோத முறை தொடங்கியுள்ளது. ஜமைக்காவில் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அசாதாரணமானவற்றை விரும்புபவர்களுக்காக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

     

    அதன்படி முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகளுக்கு இதுபோல அங்கு வைத்து நிர்வாண திருமணம் நடந்துள்ளது.

    வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அவர்கள் அங்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பதாக ரிசார்ட் தரப்பு தெரிவித்தது. இந்த முறையை பின்பற்றி உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிர்வாண திருமணங்கள் இன்றளவும் அங்கங்கே அரங்கேறி வருகிறது.

    • விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசளித்துள்ளார்.
    • குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர்.

    பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். ஆனால் தான் மிகவும் பணம் படைத்த குடும்பத்தை சேர்த்தவர் என்று ஏமாற்றி  ஜியாஜியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி ஜியாஜுவுக்கு பரிசளித்து ஏமாற்றியுள்ளார். ஜியாஜியா கர்ப்பமான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆனால் ஜியாஜுன் பணக்காரர் இல்லை என்று சில காலங்களிலேயே மனைவிக்கு தெரியவந்தது. ஆனால் கணவனை விவகாரத்து செய்யாமல் குழந்தையை தானே வளர்க்க மனைவி முடிவெடுத்துள்ளார். கணவனையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தொடர்ந்து ஜியாஜுன் ஆன்லைன் மூலம் ஜியாஜாங் என்று மற்றொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

    அவரிடம் இருந்து பணம் பெற்று தனது மனைவி வாழும் வீடு உள்ள காம்பவுண்டிலேயே வீடு ஒன்றை எடுத்து அங்கு ஜியாஜாங் உடன் இருந்துள்ளார். மேலும் இதுமட்டுமின்றி பல்கலைக் கழக மாணவிகள் ஜியாமின், ஜியாசின் மற்றும் நர்ஸ் வேலை பார்க்கும் ஜியாலான் ஆகிய மூவரையும்  காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அனைவரிடமிருந்தும் அவ்வப்போது பணம் பறித்தும் வந்துள்ளார்.

     

    மொத்தமாக சுமார் 247 லட்சம் வரை அவர்களிடம் இருந்து ஜியாஜுன் கரந்துள்ளார் . இவர்கள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள கட்டடங்களில் உள்ள வீட்டில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    ஆக மனைவி மற்றும் 4 காதலிகளை ஒரே காம்பவுண்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஜியாஜுன் கடந்த 4 வருடமாக மெயின்டேன் செய்து வந்துள்ளார். கடைசியில் ஜியாஜுன் காதலிகளில் ஒருவர் அவர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஜியாஜுன் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    • துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இமாச்சலபிரதேம் மாநிலம் மண்டியில் விடுமுறை கிடைக்காததால் வீடியோ கால் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு ஒப்புக்கொண்டனர்.

    இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தால் வீடியோ கால் மூலம் மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி விட்டதாக 4-வது கணவர் போலீசில் கூறினார்.
    • விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என போலீசார் அறிவுரை கூறினர்.

    இரணியல்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்தார். அவர் போலீஸ் நிலையம் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாகி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுபற்றி விசாரித்த போது, தற்போது குமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தனது மனைவி வந்ததும், அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ மற்றும் போலீசார், அந்த வாலிபரை போனில் தொடர்பு கொண்ட போது தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது ஒரு கோவிலில் வைத்து வாலிபருக்கும் திண்டுக்கல் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், வாலிபரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அந்த பெண், திண்டுக்கல் தொழிலாளி தனக்கு 4-வது கணவர் என்றும், அவர் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட வாலிபர் உடன் இணைந்து வாழ விரும்பி வந்ததாகவும் கூறினார். ஆனால் அவர் முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வாழ அறிவுரை வழங்கினர்.

    ஆனால் அந்த பெண், கணவர் மற்றும் மகன்களை உதறிவிட்டு பேயன் குழி வாலிபருடன் சென்று விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எனது தோழி ஒரு மருத்துவர். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
    • ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு.

    அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) முதலிடம் பெற்ற ஒருவர் திருமணத்திற்காக தனது தோழியிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார் என்று பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்டர் பீனிக்ஸ் என்ற ஐடியில் இருந்து இந்த பதிவு இடப்பட்டுள்ளது. அந்த பதிவில், "சிறுநீரக மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பெற்ற ஒருவருடன் எனது தோழிக்கு திருமண வரன் பார்க்கப்பட்டது. எனது தோழியும் ஒரு மருத்துவர் தான். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

    எய்ம்ஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற எனது தோழியின் குடும்பத்தினரிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார். ஒரு மருத்துவருக்குத் தன் சொந்தக் காலில் நிற்க கூட துணிவு இல்லையென்றால் இந்தக் கல்வியால் என்ன பயன்?

    ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு. தெலுங்கு சமூகத்தில் அவளை திருமணம் செய்து வைப்பதற்கு வரதட்சணை மற்றும் தங்களின் ஓய்வுக்கால சேமிப்பு முழுவதுமாக தேவை என்று அவளது பெற்றோர்கள் கூறுவதால் எனது தோழி காலையிலிருந்தே அழுது கொண்டிருக்கிறாள். எனது தோழியின் தங்கைக்கு திருமணம் செய்துவைக்கும் போதும் அவளது பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக வரதட்சணை முறைக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.
    • திருமணத்தை விரைந்து ஆன்லைனில் நடத்தி முடிக்க இருவீட்டார் முடிவு எடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய மணமகன், பாகிஸ்தான் மணமகளுக்கு ஆன்லைன் வழியே எல்லை தாண்டிய திருமணம் நடந்தது. இந்த வித்தியாச திருமணம் பா.ஜ.க.-வை சேர்ந்த உள்ளூர் தலைவர் தஹ்சீன் ஷாஹித் குடும்பத்தில் தான் வெற்றிகரமாக அரங்கேறி இருக்கிறது.

    தஹ்சீன் ஷாஹித் மகன் முகமது அப்பாஸ் ஹைதர் மற்றும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ராவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி, மணமகன் பாகிஸ்தான் செல்ல விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். எனினும், இரு நாடுகள் இடையே அரசியல் பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.

    இதைத் தொடர்ந்து மணப்பெண் தாயார் ராணா யாஸ்மின் ஜைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாயார் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை விரைந்து முடிக்க ஆன்லைனில் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று இருவீட்டார் இணைந்து முடிவு எடுத்தனர்.

    அதன்படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். லாகூரைச் சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

    ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், "இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான் ஒன்று தான்," என்றார்.

    மேலும் மணமகன் ஹைதர் தனது மனைவிக்கு இந்திய விசாவை எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ×