என் மலர்
நீங்கள் தேடியது "medical waste"
- வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
மருத்துவக் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோ மெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக எல்லையில் இருந்து விலங்குகள் கொண்டு செல்லும் போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியளர்கள் மற்றும் தாசில்தார்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
- கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
அப்போது 390 டன் மருத்துவ கழிவுகளை 30 டிரக்குகள் கொண்டு அகற்றியுள்ளதாக கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் "7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிடில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் நிறுத்துவதை நிறுத்த வேண்டும்" கேரள அரசுக்கு எச்சரிக்கு விடுத்தனர்.
மருத்துவ கழிவு கொட்டியது தொடர்பாக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
குப்பை அகற்றம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சாய் சத்யஜித் ஆஜரானார்.
- மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரி, அதில் வந்த 3 பேரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
- அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் தோட்டத்தில் தொடர்ச்சியாக கேரள மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியையும், அதில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

மேலும், குடோனில் உள்ள அனைத்து கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது.
- எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதுரை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு எனக்கு சொந்தமான வாகனம் மருத்துவ கழிவுகளை கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எனது வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து என் மனுவை தள்ளுபடி செய்தது, இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வாகனம் விதி முறைகளை மீறி கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது, இதை அனுமதிக்க முடியாது.
இது போன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் நடத்து முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. குறிப்பாக 75 கிலோ மீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக்கூடாது என்றும், மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்டவிதிகள் உள்ளது. ஆனால் இதில் எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது தீவிரமான குற்ற செயலாகும்.
மேலும் உள்ளாட்சி சட்டவிதிகள்படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி பண்ணுவதற்கான சட்ட விதிகள் உள்ளது. அதை செய்வதில்லை. எனவே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சித் துறை செயலர், ஆகியோரை நீதி மன்றம் தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி இதுபோன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதல்களை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிபதி புகழேந்தி முடித்து வைத்தார்.
செங்கோட்டை அருகே தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் கடந்த 20-ந் தேதி இரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை தீவிரமாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொட்டுவதற்காக ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த 27 வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடியின் அருகில் உள்ள தனியார் நிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கழிவுகளுடன் இருந்த 27 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செங்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இலத்தூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, செங்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 18 வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், 5 மினிலாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செங்கோட்டை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்ற பின்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும், கழிவுகளை ஏற்றிய இடத்துக்கே கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் இன்று அதற்கான அபராத தொகையை கட்டினார்கள். இதன்பின்னர் லாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி சென்றன. #tamilnews
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.