என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "meetings"
- அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஊட்டி,
கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேருராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர்.
தொடர்ந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 பெரிய ஊராட்சிகளை கொண்ட கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும் அடிப்படை தேவைகளுக்கான கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட. நிர்வாகத்திடம் வழங்கபட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
கோரிக்கை மனுவை படித்து பார்த்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை
- திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசு தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும் வளா்ச்சி குறித்த சுதேசி தா்ஷன் 2.0 மேம்பாட்டு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தாா்.
இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களை 4 கட்டங்களாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதில் முதல் கட்டமாக ரூ.25 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து தனியாா் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பைக்காரா படகு இல்லம் மற்றும் அருவி ஆகிய 2 பகுதிகளில் வாகன நிறுத்துமிடம்-அணுகு சாலை, பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அணுகு சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த கூட்டத்தில் உதவி இயக்குநா்கள் இப்ராஹிம்ஷா (பேரூராட்சிகள்), சாம்சாந்தகுமாா் (ஊராட்சி கள்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அய்யாசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் புனேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜன் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- திருப்பத்தூர்-சிங்கம்புணரி ஒன்றியங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
- துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஒன்றியங்க ளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.முன்னதாக முறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் பெண் குழந்தை களின் கல்வி, பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட வைகளை வலியுறுத்தி கலெக்டடர் உறுதி மொழியை வாசிக்க அமைச்சர், கிராம மக்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதே போல் மகிபாலன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கொன்னத்தான்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் அழகுபாண்டியன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் பால்துரை, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜ், ராஜேந்திர குமார், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பழனியப்பன், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், துணைச் செயலா ளர் ஷீலா ராணி சொக்கநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வநாயகி, ஊராட்சிஒன்றிய மேற்பார்வையாளர் பெரியசாமி, ஊராட்சி செயலர்களான மதிவாணன், சிவனேஸ்வரி, உதவி யாளர் குரு, மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
- தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
எனவே கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராமசபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழிலாளர் தின கிராமசபை கூட்டங்கள் நடக்கிறது.
- கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரியிருப்ப தாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில்
- கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் யூனியனை சேர்ந்த கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்புலட்சுமி, நிர்வாக உதவியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கீழக்கோட்டை, லட்சுமிபுரம், மல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கோட்டை ஊராட்சியில் சுமார் 529 ரேசன்கார்டுகள் உள்ளன. ஆனால் கிராமமக்கள் ரேசன் பொருள்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள கிரியகவுண்டன்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. 500 கார்டுகளுக்கு மேல் இருந்தாலே புதிய கடை திறக்கவேண்டும் என்ற அரசு உத்தரவுபடி கீழக்கோட்டை கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்கவேண்டும்.விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ணஎனவே கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மேலக்கோட்டை
மேலக்கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பற்றாளர் முகமதுஇலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலக்கோட்டை ரெயில்வேத ரைப்பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும்.மேலக்கோட்டையில் இருந்து 4 வழிச்சாலையை கடந்து எதிரேயுள்ள ஹவுசிங்போர்டு காலனிக்கு செல்லவேண்டி உள்ளது. 4 வழிச்சாலையில் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க பேரிகார்டுகள் வைக்கவேண்டும். ஹவுசிங்போர்டு காலனியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. அங்கு ரோடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அவற்றை சரிசெய்யவேண்டும். இல்லையெனில் ஹவுசிங்போர்டுகாலனியை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொ.புளியங்குளம்
திருமங்கலம் ஒன்றியம் கொ.புளியங்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவகாமிதர்மர் தலைமை தாங்கினார். திருமங்கலம் யூனியன் ஆணையாளர் சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். கிராமத்தின் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்