என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MENTORING PROGRAM"
- திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல், நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார்.
திருமங்கலம்
திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்க–ளுக்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல்காதர் வரவேற்றார்.
கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கி–னார். கல்லூரி முதன்மை அதிகாரி எம்.எஸ்.சகிலா ஷா, நியூக் ளியர் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, முன் னாள் முதல்வர் டாக்டர் நவராஜ் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாகரன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். (சமூக பொருளாதார மறு கட்டமைப்பு வளர்ச்சி நிறு–வன தலைவர்) சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
முதலாம் ஆண்டு மாண–வர்கள் வருகையை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி–றோம். கல்லூரி வந்துள்ள கடைசி நிமிடங்களில் படித்து தேர்வு எழுதலாம் என்று நினைப்பது கை கொடுக்காது. கல்லூரி கல்வியை கற்றுத் தேர்வது மாணவர்களுடைய கையில் தான் உள்ளது. மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெற் றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
மாணவர்கள் உலகத்தை வெல்ல வேண்டும் என்றால் நீ முதலில் உன்னை வெல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைவ–தற்கு அவர்களுக்குள்ளேயே ஒரு உந்து சக்தியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு நூலகங் களை அதிகமாக பயன்ப–டுத்துவதோடு கல்லூரி பேராசிரியர்களின் திறமை–யும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூ–ரியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட், ஏவியே–சன் ஸ்டடி, தடையவியல் துறை, மேலாண்மை துறை, கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி பேரா–சிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல் லூரி பேராசிரியை கார்த் திகா நன்றி தெரிவித்தார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தொழிற்படிப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் மணிகண்டன் பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தொழிற்படிப்புகளில் எவ்வாறு வெற்றி பெறுவது? வெற்றிக்கான இலக்கை நோக்கி எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் தொழிற்படிப்புகள் வாயிலாக வாழ்வில் பொருளாதாரத்தின் மேம்பாடுகள் பற்றிக் கூறினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதலாமாண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் துறை ராஜீவ்காந்தி செய்திருந்தார். வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
- செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வீ செர்வ் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். எம்.எஸ்.விஜி கலந்து கொண்டு பேசுகையில், அப்துல்கலாம் போன்று வாழ்வில் முன்னேற நீங்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.
இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சித் துறையில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பும், ஆர்வமும் அதிகரித்து வருவது மகிழ்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி சமூக நலனிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்விப்பணியோ அல்லது மற்ற துறைகளிலோ முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் மட்டுமே சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். எழுதப்படிக்க தெரியாத ஒரு 10 பேருக்காவது நம்மால் முடிந்த அளவு கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிபடிக்கும் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மேல்நிலை கல்வி படிப்பது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்து ரைக்க ப்படும் கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்கி தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேசுவரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எந்தெந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளது என விளக்கம்
- பெற்றோர், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
உயர் கல்வி வழிகாட்டுனர் ஆர்.அஸ்வின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்ல எந்தெந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்றும், மேலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கி முயற்சி செய்து, வெற்றி பெற வேண்டும் என கூறினார்.
முடிவில் பள்ளி முதல்வர் பரிதா நன்றி கூறினார்.
- போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் நடந்தது.
- இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையம் சார்பில் அனைத்து இளங்கலை, இளநிலை மற்றும் முதுகலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் திறன் வெளிப்பாட்டின் அவசியத்தை மாணவர்க ளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரை யாளராக சிவகாசி அப்தான் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசுகையில், நிகழ்காலச் சூழலில் அரசு வேலைகளைப் பெறும் முறைகள் குறித்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.
கல்லூரி பணி அமர்வு மைய பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். குமாரபாலாஜி நன்றி கூறினார். இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- கரூரில் கடந்த பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
- மாணவர்களின் உயர்கல்வியை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். அதனை மாணவர்களே தீர்மானிக்க வகை செய்யும் வகையில்தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
கரூர்:
நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு என்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது:
நாட்டிலேயே பள்ளியில் சேரும் மாணவர்கள் விகிதாச்சாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
இதுவரை இல்லாத அளவாக தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.42,563 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் உயர்கல்வி பயிலவேண்டும் என்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
மாணவர்களின் உயர்கல்வியை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். அதனை மாணவர்களே தீர்மானிக்க வகை செய்யும் வகையில்தான் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நம்மால் முடியாதது எதுவுமில்லை.
முயன்றால் முடியும். அரசுப் பள்ளியில் பயின்று அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானியானார். அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வியை அடையமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். கடந்தாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்