என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Militants Attack"
- ஸ்ரீநகர் புறநகரில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- தச்சிகம்-நிஷாத் பகுதிகளை இணைக்கும் காட்டுப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதேபோல் ஸ்ரீநகர் புறநகரில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை தச்சிகம்-நிஷாத் பகுதிகளை இணைக்கும் காட்டுப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்தன.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்த மோதலில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹல்கன்காலி பகுதி அருகே பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புப்படை தெரிவித்தது. கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும், மற்றொருவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
- ராணுவ வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
- பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 போர்ட்டர்களும் பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.
பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
- 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு டாக்டரும் கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
அப்பாவி பொதுமக்களை கொலை செய்வது, பொதுமக்கள் இடையே வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற செயல்கள் மனித குலத்திற்கு எதிரானது. இந்த செயலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நிற்கிறது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
- 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
- பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். போலீசார் சார்பில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனே சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, ஜம்முவின் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின் கூறுகையில், 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பயங்கரவாதியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தலின்போது பயங்கரவாத தாக்குதலோ அல்லது வன்முறையோ நடக்காமல் இருக்கும் என தெரிவித்தார்.
- நைஜீரியாவில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பலியாகினர்.
அபுஜா :
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமாகினர் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
- இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்றும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.
- பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் 17 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
- இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், விமானப்படை பயிற்சி தளம் மீது தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு திடீரென தாக்குதல் நடத்தியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், பணியில் இருந் பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்