search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mill worker"

    • மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவில் ரவிக்குமார் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மாதவன், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அக்பர் அலி உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது29). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் மில்லுக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் டாஸ்மாக் கடை அருகில் சென்ற போது மோட்டர் சைக்கிள் பஞ்சரானது. இதனால் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருக்குறுங்குடி தென்கரை கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மாதவன் (23), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர் அலி (19) உள்பட 4 பேர் ரவிக்குமாரிடம் செல்போன்,பணம் தருமாறு கேட்டனர்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாதவன் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27).அங்குள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை தனது மகளை இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக அன்பழகன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது .

    அப்போது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பழகன் குழந்தையை அணைத்து பிடித்துக்கொண்டார். இருப்பினும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அன்பழகன் இறந்தார். இந்த விபத்தில் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டது.
    • பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் காஸ்ட்ரோ (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தூங்கினார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 4 பவுன் 4 கிராம் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    காலையில் எழுந்த மோகன் காஸ்ட்ரோ மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ராஜ பாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் மில் தொழிலாளி பலியானார்.
    • வெள்ள பெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சுப்பா ராஜா மடம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). மில் தொழிலாளி. பாப்பு ராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). பாலாஜியும், வெங்கடேசும் நண்பர்கள் ஆவர்.

    மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் மழை பெய்ததால் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கி ளில் சென்றுள்ளனர்.

    மோட்டார் சைக்கிளை பாலாஜி ஓட்டினார். வெங்கடேஷ் பின்னால் அமர்ந்து சென்றார். முடங்கியாறு ரோட்டில் ராஜூக்கள் கல்லூரி அருகே சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது.

    இதனால் பாலாஜியும், வெங்கடேசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.

    வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் நடேசன்(40). இவர் மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அன்பினியன், பாரினியன் என 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நடேசன் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டில் தங்கி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பர்த்து வருகிறார். வடிவரசு தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    ஐஸ்வர்யா வேலை பார்த்த மில்லில் சின்னாளப்பட்டி அடுத்துள்ள கோட்டைப் பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (25) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் இருவரும் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சுற்றி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடிவரசிடம் கூறினர். தனது மனைவி வேறு ஒரு வாலிபருடன் சுற்றி வருவதை அறிந்த அவர் ஆத்திரமடைந்தார்.

    மனைவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர்களிடம் சத்தம் போட்டு அவரை ஒழுக்கமாக இருக்குமாறு கண்டித்து சென்றார். தொடர்ந்து சரத்குமாரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக பழகி வந்த விபரம் தெரிய வரவே அடிக்கடி ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி சத்தம் போட்டார்.



    இதனால் ஐஸ்வர்யா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சரத்குமாரிடம் ஆசையாக பேசி நாம் இதே போல் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறினார். அதன்படி சரத்குமாரும் வடிவரசை கொலை செய்ய ஒத்துக் கொண்டார்.

    அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் ஒரு வீடு கட்டப் போவதாகவும் அதனை எந்தஅமைப்பில் கட்ட வேண்டும் என பார்த்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி சாதிக் கவுண்டன் பட்டியில் உள்ள ஒரு இடத்துக்கு வடிவரசை சரத்குமார் அழைத்துச் சென்றார்.

    பேசி முடித்து விட்டு சடையாண்டிபுரம், பகுதிக்கு வரவழைத்து 2 பேரும் மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவரசின் கழுத்தை அறுத்தார். உடனே அவர் சத்தம் போடவே சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வடிவரசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய முயன்ற சரத்குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஐஸ்வர்யாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×