search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mini bus driver"

    • வேல்முருகன் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • பஸ்சில் ஏறிய 3 பேரும் வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேல அழகாபுரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 23). இவர் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பஸ்சில் அவரது தம்பி அய்யப்பன் (19) நடத்துனராக இருந்து வருகிறார்.

    இவர்கள் தூத்துக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளமுத்து நகர் வரும் வழியில் உள்ள ஜாகிர் உசேன்நகர் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயனிகளை இறக்கி விடும்போது அங்கே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 3 பேர் எழுந்து வந்து வேல்முருகனிடம் பஸ்சை இங்கு நிறுத்தக்கூடாது என்று சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதற்கு வேல்முருகன் இப்போது நிறுத்திவிட்டேன். பயணிகளை இறக்கி விட்டு செல்கிறேன். இனிமேல் நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் 3 பேரும் பஸ்சில் ஏறி வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்து உள்ளனர். காயம்பட்ட இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் தாக்குதலில் ஈடுபட்டது கணபதி நகரச் சேர்ந்த ஜார்ஜ் (29), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜை உடனடியாக கைது செய்த போலீசார் மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர்களை தாக்கிய மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளில் நாகர்கோவில் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் மினி பஸ்களில் வீடுகளுக்கு செல்வது வழக்கம். இதுபோல நேற்று மாலையிலும் ஏராளமான மாணவ- மாணவிகள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர்.

    இதில் சுசீந்திரம் மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த பிளஸ்- 2  மாணவர்கள் 2 பேர் ஒரு மினி பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். பஸ் கோட்டார் அருகே சென்றபோது, மாணவர்களுக்கும், மினி பஸ் கண்டக்டருக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மினி பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் சேர்ந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.

    டிரைவர் - கண்டக்டர் தாக்கியதில் 2 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் கோட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றனி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மினி பஸ் டிரைவர், கண்டக்டர் அபினேஷ், கவுதம்  மற்றும் ஜெனிஸ்டன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பயணிகளை ஏற்றி இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது18). தேனி- பழனிசெட்டிபட்டி வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிசெட்டிபட்டி நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மினி பஸ் நேரம் தவறி பயணிகளை ஏற்றினர். இதனை மாரிச்செல்வம் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதனால் மாரிச்செல்வம் மற்றும் மற்றொரு மினி பஸ் டிரைவர் பாண்டி மற்றும் கண்டக்டர் ராஜேஷ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாரிச்செல்வத்தை தாக்கி மிரட்டி உள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் பாண்டியை கைது செய்தனர்.
    மதுரை அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் மினி பஸ் டிரைவரை அடித்து உதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் அம்பேத் சந்திரன் (வயது 38). இவர் வாடிப்பட்டியில் இருந்து பூச்சம்பட்டிக்கு மினிபஸ் ஓட்டி வருகிறார்.

    நேற்றும் வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அம்பேத் சந்திரன் கச்சைகட்டியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு மினிபஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவருக்கும், அம்பேத் சந்திரனுக்கும் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அவரது நண்பர் பாலமுருகனும் சேர்ந்து அம்பேத் சந்திரனை தாக்கினர்.

    மேலும் அம்பேத் சந்திரன், அவரது நண்பர்கள் கோபிராஜ், செந்தில் ஆகியோர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், கோபிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான அம்பேத் சந்திரன், செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    ×