என் மலர்
நீங்கள் தேடியது "M.l.A."
- விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.
- தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.
திருப்பரங்குன்றம்
தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அவரது பிறந்தநாள் விளாசேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் கோ. தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, ராமர், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவீதா விமல் தலைமையில் கவுன்சிலர்கள் உசிலை சிவா, விஜயா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிராமணர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையா தலைமையில் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதன் தலைவர்அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர் காளிதாசன், பொருளாளர் அண்ணாமலை, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி தலைவர் ஆறுமுகம் தலைமையில் செயலாளர் மருதமுத்து, கலை இலக்கிய பாசறை செயலாளர் முருகன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, பாண்டித்துரை, விஜய், சின்னசாமி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.
- பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும், ஸ்மார்ட் டிவி வசதி வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.
- பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.
ஓட்டப்பிடாரம்:
புளியம்பட்டி அருகே உள்ள காசிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.
ஆசிரியர்களிடம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது பள்ளி மாணவ- மாணவர்களிடம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் குறித்தும் எதிர்காலத்தில் 12-ம் வகுப்பு முடித்த பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும்.
ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு வரை தமிழ் வழி கல்வியிலேயே பயில்பவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்தும் மாணவர்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ எடுத்துரைத்தார். பின்னர் பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும், ஸ்மார்ட் டிவி வசதி வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என உறுதியளித்தார்.
அப்போது உதவி தலைமை ஆசிரியர் கிரிஜா சரஸ்வதி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.
- புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.
விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை வைகைஆற்றில் பாலம் அமைய உள்ள இடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவடடத்தில் வளர்ந்து வரும் பெரிய நகரம் மானாமதுரை ஆகும். தற்போது நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வைகைஆற்றில் புதிய பாலத்திற்கு அப்போதைய தி.மு.க. அரசில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தா.கிருட்டிணன் அடிக்கல்நாட்டினார்.
அதன்பின் இந்த பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு நிறைவேற்றபடாமல் இருந்தது. இந்த திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி பாலம் கட்ட நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று மானாமதுரையில் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.
அதன்படி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பேசினார்.அதைத்தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.
தற்போது மானாமதுரை வைகை ஆற்றில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கும் இடமான போலீஸ் நிலையம் எதிரே உள்ள வைகை ஆற்றில் தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர் இந்துமதி மாவட்ட பிரதிநிதி சிப்காட் காளியப்பன் ஆகியோர் உடன்இருந்தனர்.
- ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார்.
- ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மணியாச்சி அருகே உள்ள கீழப்பூவாணி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களிடம் 100 நாள் வேலையும், அதற்கான ஊதியமும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
இதுபோல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் நடக்கும் 100 நாள் திட்ட பணிகளையும் பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தையும் பார்வை யிட்டார். அப்போது கருங்கு ளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, பொறியாளர் சித்திரை சேகர், ஓவர்சியர் சீனிவாசன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சிவகங்கை தொகுதியில் பொதுமக்களை நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகேட்டார்.
- பொதுமக்கள் சொத்து வரிவிதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு செந்தில்நா தன் எம்.எல்.ஏ. நேரடியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அவரை கிராம மக்கள் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள்வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த ஆட்சி.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய் வதறியாது உள்ளனர். மின்வெட்டால் மக்கள் மிகுந்த துயரமடைந்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.தி.மு.க ஆட்சியில் ஓராண்டு ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
பொதுமக்கள் சொத்து வரிவிதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. தான்.தி.மு.க. அரசின் வேதனைகளை வீடு வீடாக எடுத்து சொல்ல வேண்டிய தருணமாக உள்ளது.எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. நூறாண்டுகள் ஆட்சி செய்யும் என்று ஜெயலலிதா கூறினார். அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் கோபி, ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விளாத்திகுளத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் வட்டார வேளாண் துறை சார்பில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு வேளாண் துறை கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய உபகரணங்கள் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கூட்டுப் பண்ணையத்திட்டத்தில் குழு ஒன்றுக்கு அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் மதிப்பில் டிராக்டருடன் பொருத்தகூடிய வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தலைமை தாங்கினார்.
வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கே.குமரெட்டையாபுரம், கீழ விளாத்திகுளம், தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை துணை அலுவலர் முத்துச்சாமி, விளாத்திகுளம் வட்டார வயலக ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு, உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், அருள் பிரகாஷ், சரண்யா, சுதாகர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பயிர் அறுவடைபரிசோதனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- படுக்கப்பத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது
- 16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து சன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு தரப்பிலிருந்து 16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வழங்கினார். பரிசுகள் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இதில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியில் படுக்கப் பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன், தொழிலதிபர் ராமநாதன் ஆதித்தன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் உள்பட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. காட்பாடியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் பண விநியோகம் குறித்து பேசியுள்ளனர்.
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ கோவி. சம்பத்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். தனது பேச்சை மிமிக்ரி செய்து போட்டுள்ளனர். அ.தி.மு.க. சாதனைக்கு ஓட்டு கிடைக்கும். பணம் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் (64). இவரது வீடு சூலூர் அருகே உள்ள காம நாயக்கன் பாளையம் வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் உள்ளது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சூலூர் தொகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கனகராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ரத்தினம் என்ற மனைவியும் சண்முக சுந்தரம் என்ற மகனும், பாபா விஜயா என்ற மகளும் உள்ளனர். சூலூர் பகுதி மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் கனகராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். 7-ம் வகுப்பு படித்துள்ள இவர் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளராக இருந்து உள்ளார். கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சூலூர் தொகுதியில் கனகராஜ் எம்.எல்.ஏ. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி. மனோகரனை விட 36 ஆயிரத்து 631 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அவர் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு-
கனகராஜ் (அ.தி.மு.க.)- 1,00,977
வி.எம்.சி. மனோகரன் (காங்கிரஸ்) - 64,346
மோகன் மந்திராசலம் ( பா.ஜனதா)- 13,517
தினகரன் (தே.மு.தி.க.)- 13,106
பிரிமியர் செல்வம் என்கிற காளிச்சாமி (கொ.ம.தே.க.) - 9,672
கனகராஜ் எம்.எல்.ஏ. மரணம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.
இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலத்தூர் ஒன்றியம் அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர் திடலில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனரும், தமிழக முதல்வரும்மான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும்மான ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளரும் சிதம்பரம் எம்.பி.யும்.மான சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாரும் எம்.பி.யும்மான மருதராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னதம்பி,திட்டை மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் அடைக்கம்பட்டி குருசாமி, ரமேஷ், ராஜ், மாரிமுத்து,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் ராஜராம், ஜெ.பேரவை செயலாளர் உதயம் ரமேஷ், ராமலிங்கம், முத்தமிழ், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், முத்துசாமி, லேட்டஸ்ட் செல்வராஜ், மதுபாலன், செட்டிகுளம் தங்கராசு, மார்கண்டன், திருநாவுகரசு, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் செய்திருந்தார். #ADMK