என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mosquitoes"
- கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-
பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.
கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.
பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
- சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.
சென்னை:
மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.
பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.
இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.
மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.
எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
- கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.
- சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு4 முனை சந்திப்பு அருகே மேம்பாலம் வழியாக திருக்கனூர் செல்லும் சாலை பகுதியில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறி திருபுவனை ஏரியில் சென்று சேரும் வகையில் இந்த கால்வாய் உள்ளது.
தற்போது அங்குள்ள ஓட்டல்கள், கடைகள், காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது.
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.
மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கால்வா யினை பார்வையிட்டு தூர்வாரி தேங்கி நிற்கும் சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
- புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணை யாளர் (பொறுப்பு) காளி முத்து அறிவுறுத்தலின்படி கொசு ஒழிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலாண்மை
நெல்லையில் பரவலாக சாரல்மழை பெய்து வருவதால் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நட ராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்து சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொ ருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி அதனை அகற்றினர்.
பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மேலப்பாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது.
- வீட்டில் பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து வீதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள், பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். இந்தநிலையில் அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை. நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகி வரும் கொசுக்கள் சாக்கடையில் மட்டுமல்லாமல் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வேகமாக பரவுகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் மழையினால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய்களை பரப்பும் வேலையை தொடங்கி விட்டன.
வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது. இதனால் வேலைகள் முடியும் முன்பு அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், உடல்வலி, போன்ற வியாதிகளும் வந்து மருத்துவமனை செல்லும் சூழல் உள்ளது.
சிலர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகும் கொடுமையும் நடக்கிறது. கொசு ஒழிப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெரும்பாலான உள்ளாட்சிகளில் சாக்கடை, தண்ணீர் தொட்டிகள், குப்பைகள் அகற்றப்படாததால் நோய்களுக்கு அச்சாரம் போடப்படுகிறது
கொசுத்தொல்லை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு ஊராட்சிகளில் மந்தநிலை காணப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும் கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
- வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
உடுமலை :
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம்.
- அராங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதால் கொசுக்களை வெளியிடுவதில் தாமதமாகிறது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், " டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.
இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்