என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "motion"
- மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும்.
- ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் படி, பனை விதைகள் சேகரிப்பு பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பாலம் செந்தில்குமார், முசிறி விதையோகநாதன் ஆகியோர் கூறுகையில்:-
அனைத்து அரசுத்துறைகள், சேவை அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே நடப்படும் என்றார்.
- தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு.
- கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களிலும் சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட அரசாணையில் உள்ள துணை விதியின் குறிப்பிட்டுள்ளபடி பொருத்தப்பட வேண்டும் என இதன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி வாகனங்களில் சென்சார் உடன் கூடிய கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பொருத்தப்படாமல் இயக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
- தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
- தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
சேலம்:
தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் பசுமை வனப் பரப்பு 24 சதவீதம் என்ற அள வில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும். எனவே, தமிழ
கத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்து வதற்காக தமிழக அரசு விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மகோகனி, வேம்பு உள்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை நாற்றங்கால் மற்றும் தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதற்கான மரக்கன்றுகள் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட விவசாயி கள் தங்களது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் மரங்கள் நடவு செய்வதாக இருந்தால் எக்டருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 எக்டர் பரப்பிற்கு மரக்கன்றுகள் பெற்று பயன் பெறலாம். ஊடுபயிர் மற்றும் குறைந்த அடர்த்தி நடவு முறையில் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வழங்கப்படும்.
இதில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு எக்டருக்கு 200 முதல் 1000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். மரக்கன்று கள் தேவைப்படும் விவசாயி கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்தபின் மரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து அளித்திடும் பரிந்துரையின் அடிப்படையில் கன்றுகள் வழங்கப்படும். மேலும், நன்றாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு பராமரிப்பு தொகை யாக 2-ம் ஆண்டில் இருந்து மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இலவச மாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மதுரை, மானாமதுரை வழியாக 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மதுரை வழியாக திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 18-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.
இந்த ரெயில்கள் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இது வருகிற வருகிற 15-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை எர்ணாகுளத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, கருநாகப்ப ள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், திரு நெல்வேலியில் நின்று செல்லும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- சந்திரகாச்சி-மங்களூரு இடையே விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
- இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மங்களூரு சென்டிரல் வரை செல்லும் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி சந்திரகாச்சி-மங்களூரு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு கரக்பூர், ஜலேஷ்வர், பலஸோர், விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி வழியாக நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9.32 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர் வழியாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும், இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு சென்டிரல்-சந்திர காச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 17-ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக திங்கட்கிழமை மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்