search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MOVING BUS"

    • ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தார்.
    • பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயன்மான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் மகன் முகேஷ் (வயது26). இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முகேஷ் சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி அங்கே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று தென்காசியில் நடைபெறும் உறவினர் இல்ல விழா விற்காக வருவதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டார். பஸ் அதிகாலை 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது.அப்போது முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.

    பின்னர் திருமங்கலம் பஸ் நிலையத்தை கடந்தபோது முகேஷ் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பஸ்சில் பயணித்த வாலிபர் இறந்ததால் பஸ்சை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு ெசன்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பஸ்சில் பயணிந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்து பரிதவித்தனர். பின்னர் பஸ் அனுப்பி வைக்கப் பட்டது.

    • பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
    • பணத்தை அபேஸ் செய்த பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் குமார் (60). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் குமார் தனது மனைவியுடன் திருப்பூரில் 2-வது மகன் வீடு கட்டி வரும் நிலையில் மகனுக்கு பணம் கொடுக்க ரூ.7 லட்சத்துடன் மேட்டூரில் இருந்து பவானி லட்சுமி நகர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்ல 2 பேரும் பஸ் ஏறி உள்ளனர்.

    அப்போது அதே பஸ்சில் 2 பெண்கள் இவரின் சீட்டுக்கு அருகில் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் மயக்கம் வருவதாக கூறி மயக்கம் போட்டு உள்ளார்.

    மற்றொரு பெண் அவரை காப்பாற்றுவது போல காப்பாற்றி உள்ளார். பின்னர் அந்த 2 பெண்களும் மருத்துவமனை செல்வதாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.

    இந்த நிலையில் குமாரின் மனைவி சித்தோடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தான் வைத்து இருந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் சித்தோடு போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    நூதன முறையில் மயக்கம் வருவதாக நாடகமாடி கணவன், மனைவி கொண்டு வந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை அபேஸ் செய்த அந்த மர்ம பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இதனையடுத்து பவானி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் அந்த மர்ம பெண்கள் 2 பேரையும் ஆய்வு மேற்கொண்டதில் 2 பேரும் பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் சென்றது தெரியவந்துள்ளது.

    ஓடும் பஸ்சில் கணவன், மனைவியிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் அபேஸ் செய்து தப்பி ஓடிய 2 பெண்களை போலீசார் தேடி வரும் சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த அயன்கொல்லமா் கொண்டான் முத்தையா கோவில் தெருவை சேர்ந்தவர் பெத்தப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 38). இவர் ராஜ பாளையம் பழைய பஸ் நிலையம் அருகில் செயல்படும் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை இசக்கி யம்மாள் வேலை முடிந்து ராஜபாளையம் பஸ் நிலை யத்தில் டவுன் பஸ்சில் ஏறி அயன்கொல்லமா் கொண்டான் சென்றார். அப்போது மர்ம நபர் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    • மதுரை மாட்டுத்தாவணியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ்சின் இருக்கையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் பிணமாக கிடந்தவர் மேலூர் அருகே உள்ள எஸ்.கல்லம்பட்டியைச் சேர்ந்த சேக் தாவூத் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த சேக் தாவூத் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மதுரையில் வேலை தேடுவதற்காக சம்பவத்தன்று தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
    • இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அன்ன புஷ்பம் (வயது 65). இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 7 பவுன் தங்கச் செயின் ஒன்றை எடுத்து வந்தார்.

    சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கைப்பையை நகையுடன் திருடி சென்று விட்டனர். இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகையை லாவகமாக கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    திருச்சி பஞ்சப்பூர் ஐயங்கார் பேக்கரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பைப் மற்றும் இரும்பு ராடுகள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 250 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுபற்றி பாதாள சாக்கடை திட்ட பணியினை ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் செயல் அலுவலர் தினேஷ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி 22 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி பீமா நகர் விவேகானந்தா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (57). இவர் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது மர்ம ஆசாமி ஒருவன் அவர் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றார்.

    இது குறித்து ஜானகி கோட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி பாலக்கரை பீமா நகர் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் மஞ்சுளா (27). இவர் மார்சிங் பேட்டை பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது பாலக்கரை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுராம் (19), வரகனேரி நாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாத் (21), மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மசீலன் (23) ஆகிய மூன்று வாலிபர்களும் கத்தி முனையில் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று வாலிபர்களையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ×