search icon
என் மலர்tooltip icon

    மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil

    • மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக தோனியை பார்க்கிறேன்.
    • தோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

    இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.

    யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில் திடீரென எம்.எஸ். டோனியை புகழ்ந்து யோக்ராஜ் சிங் பேசியுள்ளார்.

    டோனி பற்றி பேசிய யோக்ராஜ் சிங், "மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக டோனியை பார்க்கிறேன். அவரிடம் பிடித்ததே, எப்படி பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை அறிந்து பவுலரிடம் அப்படியே சொல்லி விக்கெட் எடுத்ததுதான்.

    டோனி பயமற்றவராக இருக்கிறார். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை பணத்தால் அதற்கு அடுத்த பந்திலேயே டோனி சிக்சர் அடித்தார். டோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான டோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கனநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.

    ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாக தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள டோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார்.

    தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, டோனி 'சீப்பு'வை கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையை பார்த்து சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் தோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பிப்ரவரி 12-வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.

    2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.
    • விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் தோனி ஈடுபட்டார்.

    2024-ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2025-ம் ஆண்டை உலகமே இன்று வரவேற்ற நிலையில், எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷி தோனியுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் வீரருமான தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.

    அவர் தனது மனைவியுடன் நடனம் ஆடி பாரம்பரிய முறைப்படி விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது.
    • எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. டி20, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளார்.

    சமீபத்தில் ஒரு உரையாடலின்போது, தன்னுடைய மானேஜர்கள் அடிக்கடி பொதுமக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால் அதில் இருந்து நான் விலகியே இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மகேந்திர சிங் தோனி கூறியதாவது:-

    நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.

    நான் 2004-ல் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது மானேஜர்கள் நீங்கள் PR (public relations- மக்கள் தொடர்பு) அமைக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் அதற்கு என்னுடைய பதில் அதே பதில்தான். நான் சிறந்த கிரிக்கெட் விளையாடினால், எனக்கு PR தேவையில்லை.

    அதனால் எனக்கு ஏதாவது இருந்தால் நான் அதை வைப்பேன். இல்லையென்றால் நான் அதை வைக்க மாட்டேன். யாருக்கு எத்தனை பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள், யார் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நான் கிரிக்கெட்டை கவனித்துக் கொண்டால் மற்ற அனைத்தும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் என்பது எனக்குத் தெரியும்.

    எனக்கு முன்பு போல இப்போது உடல் தகுதி இல்லை. கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி பெற நான் மிகவும் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்கிறேன். நான் வேகப்பந்து வீச்சாளர் அல்ல, எனவே தேவைகள் அவ்வளவு தீவிரமானவை அல்ல.

    இவ்வாறு மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

    • உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கிறிஸ்துமசை கொண்டாடியுள்ளார்.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

    அதில் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மேலும் தோனி தாத்தா வேடம் அணிந்து உள்ள புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் Santa Class என பதிவிட்டுள்ளது. தோனி தாத்தா வேடமணிந்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.
    • 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோனி தனது ஓய்வை அறிவித்தார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    இதன் மூலம் எம்.எஸ்.தோனி பாணியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது எம்.எஸ்.தோனி தனது ஓய்வை அறிவித்தார். தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியில் 4,876 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இடையே தனது ஓய்வு முடிவை அறிவித்த 3-வது இந்தியராக அஸ்வின் உள்ளார்.

    ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கும்ப்ளே ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தோனி 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அந்த வகையில் அஸ்வினும் தொடருக்கு நடுவே ஓவ்யு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.
    • இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் எம்.எஸ். டோனி. இவர் அடிக்கும் ஹெலிகாப்டர் சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

    டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.

    இதனிடையே, ஐ.பி.எல். போட்டிகளை தவிர்த்து வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்காத போதிலும் எம்.எஸ். டோனியின் சந்தை மதிப்பு சரியவில்லை. மாறாக இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் முதல் பாதியில் பிராண்ட் ஒப்புதல்கள் அடிப்படையில் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் போன்ற பாலிவுட் ஜாம்பவான்களை டோனி பின்னுக்குத்தள்ளி உள்ளதாக என்று அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் யூரோக்ரிப் (Eurogrip) டயர்களின் விளம்பர தூதராக மாறிய தோனி, கல்ஃப் ஆயில் (Gulf Oil), க்ளியர்-ட்ரிப் (Cleartrip), மாஸ்டர் கார்டு (Master Card), சிட்ரோயன் (Citroen), லேஸ் (Lay's) மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் (Karuda Aerospace) போன்ற பெரிய பிராண்டுகளின் தூதராகி உள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் எம்.எஸ். டோனி 42 விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கை அமிதாப்பை விட ஒன்றும், ஷாருக்கை விட 8 அதிகம்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்.எஸ்.டோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

    ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
    • என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

    2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.

    இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

     

    'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.

    நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.

     

    நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.
    • தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் தீபக் சாஹர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹர் மற்றும் எம்.எஸ். டோனி இடையே நல்லுறவு இருந்து வந்தது. களத்தில் இருவரின் சேட்டை சம்பவங்கள் கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.

    இதையொட்டி, தீபக் சாஹரிடம் எம்.எஸ். டோனியை மிஸ் செய்கிறீர்களா என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த தீபக் சாஹர், எம்.எஸ். டோனியை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள். நிச்சயம் அவர் மிஸ் செய்கிறேன் என்று பதில் அளித்தார். 

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • மதியம் 3 மணி வரை 59.28 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் மதியம் 3 மணி வரை 59.28 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனிடையே ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது மனைவி சாக்ஷியுடன் வந்து வாக்களித்தார்.

    ×