என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal commissioner"

    • முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
    • பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது. எனவே அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், நகராட்சித்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனுவும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் முகம்மது சம்சுதீன் திடீரென தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம்பவானிநகராட்சி ஆணையாளராக உள்ள தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    • நகராட்சி பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஓட்டல், மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்பக கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகரின் முக்கியமான பகுதிகளில் நகராட்சியின் தூய்மை பணி குறித்து விளம்பரப்படுத்தப்படும். சுரண்டை நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. அங்கு நகராட்சி சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கருப்ப சாமி, நகராட்சி மேஸ்திரி ராமர், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள், கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்ட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

    தொடர்ந்து இன்று மண்டலம் 4க்கு உட்பட்ட வார்டு 50, தென்னம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு 21 குமரன் பூங்கா மற்றும் வார்டு 43 ஆலங்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வார்டு 27 குமார் நகர் மற்றும் வார்டு 1 அங்கேரிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார். 

    • 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
    • குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள்,மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேரம்,வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்ட படி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யா விட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வாகன உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    • உரிமம் பெற்றவர்களை தவிர வேறு யாரும் இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வாகன உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். இதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு யாரும் இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது. உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி உரிய நேரத்தில் குறிப்பிட்ட வழிகளை பின்பற்றி முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும், உரிமம் பெற்ற வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதோடு அந்த கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து டேட்டா அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முதல்முறை குற்றம் செய்தால் ரூ.25 ஆயிரமும்,தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்கள் செய்பவர்களுடைய உரிமமும் ரத்து செய்து வாகனமும் பறிமுதல் செய்யப்படும். வெள்ளகோவில் நகராட்சியில் அகற்றப்படும் கழிவுகளை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும், கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும்.விதியை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    • கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி.
    • தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது, வில்லியனூர் கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைத்தல், கொம்பாக்கம்பேட் காந்தி பள்ளி வழியாக செல்லும் வாய்க்கால் சீரமைப்பது, குப்பம், குப்பம்பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கொம்பாக்கம், குப்பம்பேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், மருத்துவ அதிகாரி துளசிராமன், நில அளவை அதிகாரி அண்ணாமலை, கொம்பாக்கம் தி.மு.க நிர்வாகிகள் கந்தசாமி, ஜெகன்மோகன், ராஜேந்திரன், கதிரவன், ஜனார்த்தனன், தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.
    • ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்படைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது :- திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி மூலம் வீடு, வீடாக மற்றும் கடைகள் தோறும் சேகரமாகும் அனைத்துவித கழிவுகளும் பல்வேறு நிலைகளாக தரம் பிரித்து நகரில் 2 இடங்களில் உள்ள உரம் தயாரிக்கும் மையங்கள் மூலம் உரம் தயாரித்தல், விற்பனை செய்யக் கூடிய கழிவுகளை விற்பனை செய்தல், எரிய கூடிய கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள் நடக்கிறது.

    திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் 2016-ன் படி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து வித எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், மின்னணு உபகரணங்கள் போன்ற பொருட்கள் பூமியில் சேர்வதை தடுக்கும் வகையிலும், அவைகளை அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் . நமது நகராட்சிப் பகுதிகளில் கழிவுகளை நகராட்சி மூலம் சேகரித்து அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதால், இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடு, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பயனற்ற நிலையில் உள்ள கழிவுகளான எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பயனற்ற கடிகாரங்கள், ரேடியோக்கள், டி.வி., செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்ள், உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள ரெடியூஸ் ரீயூஸ் ரீசைக்கிள் (ஆர்.ஆர்.ஆர்) மையத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜூன் மாதம் 4-ந் தேதி வரை ஒப்படைத்து நகரில் தூய்மையினை காக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, மொத்த வியாபாரம் செய்யும் கடைகள், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்பட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக் விற்பனை செய்யப் படுகிறதா?

    அல்லது பயன் பயன்படுத்தி வருகிறார்களா? என கண்டறியும் வகையில் பவானி நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) கதிர்வே ல் மற்றும் பரப்புரை யாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

    சோதனையில் 5 கடைகளில் சுமார் 20 கிலோ கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் 5 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ேமலும் தடை செய்யப்பட்ட கேரிபேக் விற்பனை செய்யப்பட்டு வருவது மீண்டும் கண்டறி யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார்.

     திருப்பூர் :

    வெள்ளகோவில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப்படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதை நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த மணி என்பவர் பணியிட மாறுதலாக கூடலூர் நகராட்சியின் பொறியாளராகவும், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபு ரிந்து வந்த தீபன் என்பவர் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனரகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :- காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.

    • மனோகரன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
    • 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கடந்த 2002-ம் ஆண்டு பணிபுரிந்த மனோகரன் பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்த செந்தில்குமாரிடம் பண்ரு ட்டி நகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலை ப்பள்ளியில் மேல்தளம் அமைக்கும் பணியை முடிந்து அதற்குண்டான காசோலை வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    இவ்வழக்கை விசாரணை செய்த கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மனோகரன் 2015-ம் ஆண்டு சென்னைஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி மனோகரன் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து கடலூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1 1/2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ.4, ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டது. இந்த தீர்ப்பின்படி கடலூர் ஊழல் தடுப்பு பிரிவினர் மனோகரளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×