என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mysterious object"
- பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
- மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.
- சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
- சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.
மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.
- குடியாத்தம் அருகே இரவு வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
- இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமம் மோர்தானா கால்வாய் அருகே நேற்று இரவு 7 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே வந்து பார்த்தனர்.
அதில் பாராசூட் போன்ற ஒரு பொருளும், அதன் அருகிலேயே சிக்னல் அடித்துக் கொண்டு சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததைக் கண்டனர். இதனால் கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரித்தனர். வானத்தில் இருந்து கீழே விழுந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிலிருந்து சிக்னல்கள் வந்தபடி இருந்த சிறிய அளவிலான பாக்சில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என முகவரி இருந்தது. மேலும் அதில் போன் நம்பரும் இருந்தது. போலீசார் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்டபோது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என தெரிய வந்தது.
அந்தப் பெட்டி பல்வேறு பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை போலீசார் பத்திரமாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
வானிலிருந்து மர்ம பொருள் விழுந்ததால் குடியாத்தம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
- சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகுண்டாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம்.
வடமதுரை:
வடமதுரை, அய்யலூர் பகுதியில் அவ்வப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகு ண்டாக இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகித்து புகைப்படம் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டு ள்ளனர். அது வைரலாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த மர்ம பொருள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்