search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "name change"

    • அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டிள்ளது
    • நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்ற அம்மாநில பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மராட்டிய வரலாற்றில், 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்துமத துறவியான துக்காராம் பக்தி கவிதைகள் மற்றும் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களால் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

    எனவே புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கவுரவிக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    • ஒவ்வொரு அதிபரின் முன்பாக நாட்டின் பெயர் அட்டை வைக்கப்படும்
    • தங்கள் கூட்டணிக்கு அஞ்சி நாட்டின் பெயரையே மாற்றுவதாக எதிர்கட்சிகள் கூறின

    வரும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என ஒரு தகவல் சென்ற வாரம் வெளியாகியது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், அவ்வாறு பெயர் மாற்றம் வருவதை ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரித்தனர்.

    ஆனால், இருபதிற்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை 2024 தேர்தலில் எதிர்க்கும் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், ஜி20 உறுப்பினர்கள் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் புது டெல்லிக்கு வந்தனர்.

    அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாடு சம்பந்தமாக 'இந்தியா' எனும் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய பெரும்பாலான அதிகாரபூர்வ பதிவுகளிலும் 'இந்தியா' எனும் வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச மாநாட்டு மையத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உலக தலைவருக்கும் முன்பாக மேஜையில் அவரவர் நாட்டையும் குறிக்கும் விதமாக ஒரு அட்டை வைக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக உள்ள அட்டையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி சார்பில் ஒரு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பிதழில் பாரத் நாட்டின் ஜனாதிபதி என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி சென்ற வாரமே எதிர்கட்சி தலைவர்கள் தொடங்கி வைத்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

    தற்போது பிரதமர் பாரத் நாட்டின் தலைவராக மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி நாட்டின் பெயர் மாற்றம் உறுதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டதால், பா.ஜ.க. நாட்டின் பெயரையே மாற்ற துடிப்பதாக அக்கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • “ சென்னை, மதுரை மற்றும்‌ திருச்சி அரசு கிளை அச்சகங்களில்‌ தற்போது துணை விற்பனை நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன.
    • அரசு கிளை அச்சகங்களில்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்ய விண்ணப் பிக்கும்‌ வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    சேலம்:

    தமிழக சட்டசபையில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித் துறை அமைச்சர் பேசுகையில், " சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படு வதற்காக பொதுமக்களின் விருப்பத்திண்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி ஏற்படுத்த ப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு கடந்த 13-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செல்லான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
    • மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

    அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.

    இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்ற மம்தா கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. #WestBengal #MamataBanerjee #NameChange
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதா கட்சி, அந்த மாநிலத்தின் பெயரை பச்சிம்வங்கா என மாற்ற ஆதரவு அளிக்கிறது. அந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு மம்தா பானர்ஜி அரசு, 2011, 2016 இப்போது 2018 என மூன்று முறை முயற்சித்தும், மத்திய அரசை நாடியும், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.



    முதலில் அவர் 2011-ம் ஆண்டு பச்சிம்வங்கா என பெயர் மாற்றம் செய்ய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை நாடினார். அது நிராகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் பெங்கால், வங்காள மொழியில் பங்களா, இந்தியில் பங்கால் என்று மாற்றிக்கொள்ள அனுமதி கோரி நிராகரிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவிக்கையில், “ மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால் பச்சிம்வங்கா என்றுதான் மாற்ற வேண்டும். வேறு பெயர் மாற்றினால் குழப்பமே மிஞ்சும்” என கூறி உள்ளார். 
    பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்ளா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வங்காளம் 2 ஆக பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுடன் இணைந்தது. கிழக்கு வங்காளம் பின்னர் வங்காளதேசம் என தனி நாடு ஆனது. வங்காளத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், ஆங்கில எழுத்தின்படி மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இருப்பதை தவிர்க்கவும் மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார்.

    இதையடுத்து 2011-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தை ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி மத்திய அரசின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அனுப்பினார். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து பெங்காலியில் ‘பங்ளா’ எனவும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ எனவும், இந்தியில் ‘பங்கால்’ எனவும் மாற்றக்கோரி மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்ளா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்காள அரசு நேற்று அனுப்பியது. 
    ×