என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nature"
- விழாவில் 2,800 பள்ளி மாணவிகளுக்கு விதைபந்து பேனா வழங்கப்பட்டது.
- விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி 2,800 பள்ளி மாணவிகளுக்கு இயற்கையால் செய்யப்பட்ட விதைபந்து பேனா வழங்கினார்.
இதில் பேசிய துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நமது பாரம்பரிய அகத்தி, வேப்பமரம் போன்ற மரங்களின் இருக்கும் விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும். பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டு அந்த மரத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு மரம் வளர்க்கும் மாணவிகளுக்கு உங்கள் ஆசிரியர், பெருமக்களின் உதவியோடு அதற்கான ஊக்கமும் பரிசும் நான் நிச்சயம் தருவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அனார்கலி, பகுதி துணைச் செயலாளர் அப்துல் சுபஹானி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
- இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது.
விழுப்புரம்:
மழை பெய்ய வேண்டிய இந்த சமயத்தில் செஞ்சி பகுதியில் நேற்று திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டி சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 7மணி வரை நீடித்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் பனிமூட்டம் இருக்கும். தற்போது மழை காலம். எனேவ பனிமூட்டம் இருப்பது இல்லை. இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது. அது போல் இயற்கையும் மாறுகிறது என்றார்.
- வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வள்ளிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிற்சியில் மோகனூர் வட்டார அங்கக வேளாண்மை சான்று பெற்ற விவசாயி வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கக வேளாண் சான்று பெறும் முறைகளை விளக்கினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.இதில் வள்ளிபுரம் இயற்கை விவசாயி கலைவாணி அங்கக வேளாண்மையில் தனது பண்ணை அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி விளக்கமளித்து வருகை புரிந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினர்.
- ஓவிய போட்டி நடந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஓவியப்போட்டி நடந்தது. அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
- விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
- சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.
உடுமலை :
இயற்கையை பாதுகாப்பதில் தென்னை நார் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கயிறு வாரிய தலைவர் குப்புராமு தெரிவித்தார். இது குறித்து கயிறு வாரிய தலைவர் குப்புராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னை நார் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பல்துறை பயன்பாடுகளுடன் கைகொடுக்கிறது. பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் செயற்கை பொருட்கள் போன்று இல்லாமல் தென்னை நார் இயற்கையானது.நீடித்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார் கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னை நார் கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்து காற்றோட்ட பண்புகளை வழங்குகிறது. ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மண்ணில் ஈரப்பதம், ஊட்டசத்தை தக்க வைக்கவும், திறன் மேம்படுத்தவும் தென்னை நார் கழிவை கரிம திருத்தமாக சேர்க்கலாம். இது தாவரங்களில் சிறந்த காற்றோட்டம் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.தோட்டக்கலையில் பிளாஸ்டிக் பூந்தொட்டிகளு க்கு மாற்றாக தென்னை நார் பூந்தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிமானம், மண் சரிவுகளை கட்டுப்படுத்த தென்னை நார் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த ப்படுகின்றன. தென்னை நார் பொருட்களை பயன்படுத்து வதால் சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் கழிவுகளின் அளவை குறைக்க முடியும்.இதன் உற்பத்தி குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தை கொண்டுள்ளது. தென்னை நார்களை பிரித்தெடுப்பதில் மிக குறைந்தபட்ச ரசாயன சிகிச்சைகள் மட்டுமே உள்ளது.கழிவு என கருதி ஒதுக்கிய இந்த பொருட்களை கயிறு வாரியம் ஆராய்ச்சி வாயிலாக செல்வமாகவும், அனைத்து சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு மாற்றாகவும் மாற்றியதன் வாயிலாக குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்