என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Neet Exam"
- கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 17).
முத்துலெட்சுமி 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் 2-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முத்துலெட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- இந்தி திணிப்பை எதிர்த்தது திராவிட இயக்கங்கள் தான்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது.
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
* சமஸ்கிருதம் சமத்துவத்திற்கும் ஏழை, எளிய மக்களின் நலனிற்கும் எதிராக இருந்தது.
* திராவிட இயக்கம் தான் தமிழகத்தில் பகுத்தறிவை வளர்த்தது.
* முற்போக்கு அறிவியல் கருத்துகளை வளர்த்தது திராவிட இயக்கம்.
* இந்தி திணிப்பை எதிர்த்தது திராவிட இயக்கங்கள் தான்.
* தமிழகத்தை சேர்ந்த பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறினார்.
- என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது.
- உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
தேர்வு முறை நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு ஜூன் 22-ந் தேதி அமைத்தது. சுப்ரீம் கோர்ட் குழுவிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொண்டது.
இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறையில் மாற்றங்களை பற்றி விவாதிப்பதற்கு நடத்தப்பட்ட கூட்டத்தின் தகவல்களை சுகாதார ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.
அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பதிலில் தேடப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. நீங்கள் விரும்பியபடி, இந்த தகவலை உங்களுக்கு வழங்க முடியாது என்று கூறியிருந்தது.
இதை தொடர்ந்து பாண்டே மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் நீட் 2024 மற்றும் 2025 தேர்வுகள் தொடர்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் விபரங்களை கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அரசு இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
அதன் அறிக்கை கிடைக்க இன்னும் காத்திருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக டாக்டர் பாண்டே கூறியிருப்பதாவது:-
நீட் நுழைவு தேர்வில் மாணவர்களால் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை புரிந்து கொள்ளவும், தெளிவுப்படுத்தவும் ஆகஸ்டு மாதம் முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.
கடைசி நிமிட மாற்றங்கள் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும் என்றார்.
- மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
- சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதால் அவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது அப் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் என தெரியவந்துள்ளது.
காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 323, 355, 75 JJ act பிரிவுகளில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலப்பாளையம் உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்துகிறார்.
சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
- ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சேலம் எடப்பாடியில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும் தான்.
* நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது.
* மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
* ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
* திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம் என்று கூறினார்.
- சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
- மருந்துகளை பார்த்ததால் மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சன்னிகுமார் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அவர் 664 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர் இந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
அவர் நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். நீட் தேர்வுக்காக அவர் இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.
இதனால் அவரது கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
மருந்துகளை பார்த்ததால் எனக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பது எனது எதிர்காலத்தை பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன் என்று கூறியுள்ளார்.
சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ.6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.
- முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது.
- முதுநிலை நீட் தேர்வை 2.28 லட்சம் மருத்துவர்கள் எழுதினர்.
நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கை 'முதுநிலை நீட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்ததேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. நாடுமுழுக்க 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை, நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதை அடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன.
- உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மற்றும் இவரது மனைவி சாந்தி. விவசாய கூலித்தொழிலாளர்களான இவர்களது இரண்டாவது மகன் தனுஷ் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு வட மாநிலங்களிலும் எதிரொலிக்க தொடங்கிய நிலையில், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது
- தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகின்றனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தேர்வானது இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
- இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
- நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது.
இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
- முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை.
இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
குளறுபடி என்ற வார்த்தை வந்ததில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.
இதற்கிடையில் 'டெலிகிராம்' என்ற சமூகவலைதளப் பக்கத்தில் ''PG Neet leaked Materials'' என்ற குழுவில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் வேண்டுமா?, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வாங்க முன்வந்தால் ஒரு விலை எனவும், அதற்கு பிறகு வாங்கினால் வேறொரு விலை எனவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அதாவது, ஒரு வினாத்தாள் வாங்க ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும், குழுவில் உள்ளவர்கள் 60 சதவீதம் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இளநிலை 'நீட்' தேர்வு விவகாரத்துக்கு சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட்டு முற்றுப்புள்ளி வைத்து, அடுத்தகட்ட பாதைக்கு வழிகாட்டியது. இந்த சூழலில், தற்போது முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கிடைப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுநிலை நீட் தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கணிசமான தொகைக்கு வினாத்தாள் வழங்குகிறோம் என முதுநிலை நீட் தேர்வு ஆர்வலர்களை சில வஞ்சகர்கள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் வழங்குவதாக சொல்லப்படும் டெலிகிராம் குழுவில் முதுநிலை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இருப்பதாக கூறி தவறான பாதைகளில் வழி நடத்த முயற்சி செய்கிறார்கள்.
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவு என்று பரவும் தகவல்கள் போலியானது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது, பரப்புவதை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் சரியாக கையாளும்.
தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக ஏஜெண்டுகள், மோசடியாளர்கள் செல்போன் அழைப்பு, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் அணுகினால் https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையும் அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.
- வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. 30-வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கழகப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.
பா.ஜ.க. அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதுடன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்