என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nehru"
- ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீது பாஜக இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது
- காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டது
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு வடமாநிலங்களில் பலமான தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது தொடங்கத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களை முனைவைத்து வருகின்றனர்.
தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் இல்லாமல் சுதந்திரத்துக்குக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீதும் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடத்தையும் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் பகவத் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர், காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு சுதந்திரத்துக்கு பாதை அமைத்தது என்றும் நாட்டுக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட ஏராளமான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கி அளித்து, இன்றளவும் நமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.
ஒவ்வொரு இந்தியனையும் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்துக்காகப் போராடத் தூண்டியது என்று பேசியுள்ளார். கடந்த மே 22 ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. மோகன் பகவத் பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது
- காந்தி’ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
- 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
அமேதி பாராளுமன்றத் தொகுதி 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் வரை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.
அமேதியில் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய மந்திரி) 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.
இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி பாராளுமன்றத் தொகுதியில் `காந்தி' குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998-ம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவர்களின் சார்பில் சதீஷ் சர்மா நிறுத்தப்பட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் மீண்டும் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றார்.
இந்த முறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினார். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி வாகை சூடி இறுதியாக 2019 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தார்.
காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வித்யா தர் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.
1977 தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றார். மீண்டும் 1980-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி தோற்கடித்தார்.
வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.
இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரசுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.
இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு மாறினார்.
அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதேதொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இதுவரை 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர்.
- இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள் என்றார் பிரியங்கா.
டேராடூன்:
உத்தரகான்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இங்குள்ள ராம் நகருடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.
காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள்? கடந்த 10 ஆண்டாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை.
10 ஆண்டாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும்? சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்துள்ளது.
முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும்?
இமாசலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தேவ பூமி என வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மோடி அரசு வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது என தெரிவித்தார்.
- ராஜபாளையத்தில் நேருவின் 135-வது பிறந்த நாள் விழா நடந்தது.
- என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 135-வது பிறந்த நாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு பராமரிப்பு குழு சார்பில் கொண்டாடப்பட்டது. நேரு சிலைக்கு பராமரிப்பு குழுவின் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், வருவாய் அலுவலர் முத்துசெல்வம், அனைத்துமகளிர் காவல் ஆய் வாளர் மாரியம்மாள், போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி உதவி தலை மையாசிரியர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த விழாவில் சிலை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ரகு, வாசுதேவராஜா, என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை உறுப்பினர் ராம்விஷ்ணு ராஜா, ராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறி னார். நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழாவில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தொடக்கப் பள்ளி, முருகன் நடுநிலைப்பள்ளி, என்.ஏ.பாப்புராஜா நடுநிலைப்பள்ளி, என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, புதுவை மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாததாலும், வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படுத்தப்படாததாலும் வார இறுதி நாட்களில் புதுவை மக்கள் நடமாட முடியவில்லை.
நகரில் வாகனங்களை நிறுத்த இட வசதியில்லையே என்ற ஒரு காரணத்திற்காகவே பலர் விடுமுறை தினத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். இது மேலும் மக்களின் போக்குவரத்திற்கும், வாகனங்கள் நிறுத்து வதற்கும் பிரச்சனை களையே உருவாக்கும்.
ஏற்கனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டபடியே குறைந்த பட்சம் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை கட்டி புதுவை நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிலை பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும் இதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் யாரும் இதுவரை பார்வையிடவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
குஜராத்தின் அம்ரேலி தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் படேலின் சிலையை இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர் கூட இதுவரை படேல் சிலையை பார்க்க வரவில்லை. படேலை தங்கள் கட்சியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடிவரும் காங்கிரசார் அவரது சிலையை பார்க்க வராதது ஏன்?
ஜவஹர்லால் நேருவை அவமதிப்பதற்காகவோ, சிறுமைப்படுத்துவதற்காகவோ படேல் சிலையை நிறுவவில்லை. இது (படேல் சிலை), நான் உள்பட லட்சக்கணக்கான இந்தியர்களின் உண்மை மற்றும் மரியாதை சார்ந்த விஷயம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, நாட்டை ஒருங்கிணைத்த படேலுக்கு நாம் செலுத்தவேண்டிய நன்றிக்கடன் இது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் காஷ்மீர் விவகாரத்தை படேலிடம் கொடுக்காமல், நேரு தன்னுடனேயே வைத்துக்கொண்டதால் 70 ஆண்டுகள் கடந்த பிறகும் காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. உண்மையை சொல்லப்போனால் அரசியல் ஆதாயத்துக்காக காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது காங்கிரசின் கொள்கை ஆகும்.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரவி இருந்த பயங்கரவாதத்தை 2½ மாவட்டங்களுக்குள்ளாக நாங்கள் சுருக்கி விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழவில்லை.
கடந்த காலங்களில் புனே, ஆமதாபாத், காஷ்மீர், காசி, ஜம்மு என சீரான இடைவெளிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. இது நாட்டுக்கான சேவையாக நீங்கள் பார்க்கவில்லையா? தற்போது நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லையா?
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் முதல் முறையாக கதறியது. மோடி தயவுசெய்து போனை எடுங்கள் என அலறினர். அவர்களை அந்த நிலைக்கு நாம் தள்ளிவிட்டோம்.
டோக்லாமில் 2017-ம் ஆண்டு சீனப்படையினரின் கட்டுமான பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட பதற்றத்தின் போது, நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் என்னிடம், கூடுதல் கவனமாக இருக்குமாறு தெரிவித்தனர். ஆனால் எனது சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த மக்களோ, எனது மன உறுதியை வலுப்படுத்தினர். இதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.
நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குறைவான தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதைப்போல முதல் முறையாக இந்த தேர்தலில்தான் அந்த கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. இதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் சக்தி ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #LokSabhaElection #SardarPatel #Nehru #PMModi
ஆலந்தூர்:
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.
இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay
டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்