என் மலர்
நீங்கள் தேடியது "Nellai"
- அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.
அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.
- ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
- இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை பிடித்தது.
நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
- ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
- இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை தொடர்பாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாவட்ட அவைத்தலைவர்- பரமசிவன், இணைச் செயலாளர்- செல்லசித்ரா, துணைச் செயலாளர்கள் முருகேசன், இசக்கியம்மாள், மாவட்ட பொருளாளர் இசக்கியப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் குபேந்திர மணி என்ற அசையாவீரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் லாரன்ஸ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகேசன், இளைஞர் அணி செயலாளர் இர்சத்கான், மகளிர் அணி செயலாளர் பால்கனி, வக்கீல் அணி செயலாளர் புவனேஷ், தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ், ஊடக அணி செயலாளர் ஜான்பீட்டர், விவசாய அணி செயலாளர் தங்கமணி, மாணவர் அணி செயலாளர் டெவின், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சபரீஸ், வர்த்தக பிரிவு அணிச்செயலாளர் சிவக்குமார், மீனவர் அணி செயலாளர் சரோஜ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர்கள்- ரவி என்ற பத்மநாதன், ஸ்மித் ஆன்ரூஸ், சந்தியாகு, பொன்மணி சுசிலா, பால்பாண்டி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள், டென் சிங் சாமிதாஸ், ஸ்டீபன் முத்தையா, சாமுவேல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
எனவே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், பேரூராட்சி பகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நெல்லை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கும் புதிதாக அ.தி.மு.க. நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
- நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்கீல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், அப்துல் ஜப்பார், ரமேஷ், இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மத்திய உள்துறை அலுவல் மொழி தொடர் பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டா யமாக இந்தி மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்து இருக்கிறது.
இது தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக கொண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும். எனவே இதனை திரும்ப பெற வழியுறுத்தியும், ஒரே பொதுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். எனவே இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றனர்.
- தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடு பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் விவசாயி
- வீட்டு அருகே வந்தபோது அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்
நெல்லை:
தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடு பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 41). விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று செந்தில் முருகன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வீட்டு அருகே வந்தபோது அவரை வெங்கடேஷ் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் இன்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
+2
- விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
- புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நெல்லை:
நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
அபராதம் உயர்வு
அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் புதிய வாகன மோட்டார் சட்டம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதிரடி சோதனை
நெல்லை மாவட்டத்திலும் இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சந்திப்பு மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, சப்பாணி தலைமையிலும், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் சென்றவர்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி10 மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டது.
இன்று முதல் நாள் என்பதால் சில இடங்களில் வாகன ஓட்டிகளுககு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மேலப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி இஸ்மாயில் கூறிய தாவது:-
நான் மேலப்பா ளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறேன். தினமும் பொரு ட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கு வதற்காக டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு வந்து செல் கிறேன்.
இந்த பகுதி எப்போதும் போக்கு வரத்து நிறைந்ததாகும். எனவே ஹெல்மெட் அணிந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டே அரசு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. எனவே இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.
பாளையை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் கூறிய தாவது:-
நான் தனியார் இன்சூர ன்ஸ் கம்பெனி யில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் விபத்து வழக்கு தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு சென்று வருகிறேன்.
விபத்து வழக்கு களில் சிக்கி உயிரிழ ப்பவர்கள் பெரு ம்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவ ர்களாக இருக்கிறார்கள்.
இதில் உயிரிழக்கும் பலர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழந்ததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணமும் கிடைக்காமல் போய் விடுகிறது.
இதனை கருத்தில் கொண்டே வாகன சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்வோ ர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனை தவிர்க்க ரூ.400-க்கு ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என்பது என கருத்து.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-
நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. நாங்கள் அபராதம் விதிக்கும் வழக்குகளில் பெரும்பாலும் மது அருந்துவிட்டு வானம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் அதிக அளவில் சிக்குகிறார்கள்.
வாகன ஓட்டிகளின் நலன் கருதியே புதிய வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் அபராதம் விதிக்கிறோம். பொது மக்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. எனவே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கருதி விதிமுறை களை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா.
- தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு தனது அறையில் மயங்கி கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால விக்னேஷ் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நெல்லை:
மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கதலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனுகொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாது:-
கடந்த 2017-ம் ஆண்டு தொற்றா நோய் மருத்துவ பிரிவில் நாங்கள் நியமனம் செய்யப்பட்டோம். பின்னர் மக்களை தேடி மருத்துவத்திற்கு மாற்றப்பட்டோம். எங்களுக்கு கூடுதலாக பணி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஊதிய உயர்வோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. தினமும் 20 வீடுகளில் எங்களை ஆய்வு செய்ய கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 வழங்கப்படும் எனவும், பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
- பாம்பு கடித்த தீணணைப்பு வீரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை, அக்.27-
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ேநற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவரின் காலின் அருகில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை அறிந்தார். பின்னர் அது பாம்பு என்று அறிந்ததும் சுதாரித்து கத்தி கூச்சலிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் பதறியபடி வெளியே சென்றனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செனறு பாம்பை தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த பாம்பு மறைவிடத்திற்கு சென்றது. எனினும் வெகுநேரமாக பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடினர். ஆனால் அது சிக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் அச்சமுடன் வாசலிலேயே வெகுநேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சாரைப்பாம்பு நிற்பதை பார்த்தனர். அதனை தீயணைப்பு வீரர் அமல்ராஜ் என்பவர் பிடிக்க முற்பட்டார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சகவீரர்கள் அந்த பாம்பை பிடித்து சென்றனர்.
- பாளை துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்புற விநியோக பிரிவு செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாளை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட், திருச்செந்தூர் சாலை, திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம்,
மகாராஜநகர், தியாக ராஜநகர், ராஜ கோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி, சாலை,கான்சாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல மேலப்பாளையம் துணைமின்நிலையத்தில் நாைள(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேலப்பாளை யம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.