என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Netherlands"
- தோல்வி அடைந்த இஸ்ரேல் ரசிகர்கள்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
- கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் இஸ்ரேல் அணி தோல்வி அடைந்தது. அதனால் இஸ்ரேல் ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.
போட்டி முடிந்து ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி கோஷமெழுப்பினர்.
கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நெதர்லாந்தில் இருக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
- பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
- வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
- அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.
பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.
மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.
எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின.
- குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
- நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் முறையே 34, 46 மற்றும் 30 ரன்களை அடித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் முறையே 31 மற்றும் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 7 ரன்களிலும், சைபிராண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.
- ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
- 29 மற்றும் 83-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணி கோல் அடித்து வென்றது.
பெர்லின்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் போலந்தின் ஆடம் புக்சா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நெதர்லாந்தின் காகி காக்போ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட முயன்றனர். கடைசியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெகோர்ஸ்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து 2-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- தன்சித் ஹாசன் 35 ரன்களை சேர்த்தார்.
- ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் மற்றும் லிட்டன் தாஸ் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹாசன் 35 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 64 ரன்களையும் குவித்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை அடிக்க வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் பிரிங்கில் 1 விக்கெட் வீழ்த்தினர்.
160 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஒ தவுத் முறையே 18 மற்றும் 12 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் சைபிராண்ட் முறையே 26 மற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார்.
போட்டி முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார்.
- நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கினர். இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னிலும் அடுத்து வந்த லிட்டன் தாஸ்சும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்தது.
சிறப்பாக விளையாடிய தன்சித் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 25 ரன்னில் வெளியேறினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 64 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
- இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
டி20 உலகக் கோப்பை 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.
- டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து அணி சார்பில் பொறுமையாக விளையாடிய சிப்ராண்ட் 40 ரன்களை சேர்த்தார். இறுதியில் போராடிய லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய குவிண்டன் டி கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரமும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
இதையடுத்து ஸ்டப்ஸ் நிதானமாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட தென் ஆப்பிரிக்கா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிவில் டேவிட் மில்லர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நெதர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய கிங்மா மற்றும் வான் பெக் தலா 2 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
- ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
- இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய நேபாளம் அணி 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நெதர்லாந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
காத்மண்டு:
நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நேபாளத்தில் நடைபெற்றது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. ஆசிப் ஷேக் 47 ரன்னும், குல்சன் ஜா 34 ரன்னும் எடுத்தனர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் லெவிட் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். சைப்ரண்ட் 48 ரன்னில் அவுட்டானார்.
இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. லெவிட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்