என் மலர்
நீங்கள் தேடியது "O Panneer Selvam"
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரேமலதா விஜயகாந்த், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல அமித்ஷா, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
- மதுரையில், பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா-வை சந்தித்து பேசியிருந்தார்.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து நேரடியாக தமிழகம் வருகிறார். மதுரை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார்.
இந்த நிலையில், மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில், பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் இணைய தொடர் முயற்சி எடுத்து வரும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா-வை சந்தித்து பேசியிருந்தார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அமித்ஷாவை-வை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார்.
- தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
- ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.
அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.
அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.
பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.
அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும்.
- மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை டன்னுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றது. தி.மு.க. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் ஆதார விலையோடு சேர்த்து 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும். 2025-2026-ம் ஆண்டு கரும்பிற்கான ஆதார விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும். இரண்டையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
- தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் தி.மு.க. அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்துக்கு கோவை செல்வராஜ் தலைமை வகித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் சாமானிய தொண்டனும் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என்ற வகையில்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிகளை உருவாக்கினர்.
ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகள் இதனை தங்கள் சுயநலத்துக்காக திருத்தி மாற்றியுள்ளனர். இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் நன்கு புரிந்து வருகிறார்கள். புதிய சட்ட விதிகளை உருவாக்கியதால் மிட்டாமிராசுதார்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு இதனை மாற்றுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த நேர் வழிப்பாதையில் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
- கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பொது வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருக்க கூடாது என்ற ரீதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
அந்த வகையில் கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, "மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருந்து விடாதீர்கள்" என்று உதாரணம் காட்டியது மண்டபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
- அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
- தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பூத்துக்கு 25 பேர் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 7500 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்கும்.
325 பூத்-ல் ஒரு ஓட்டு குறையும் என்றால் 325 ஓட்டு குறையும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். புதிதாக நமக்கு சாதகமானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உண்மையாக பாடுபட வேண்டும். அது தான் நிரந்தரம் ஐஎஸ்ஐ என்று ஒரு முத்திரை நல்ல பொருள் என்று அர்த்தம் . அது போல் அ.தி.மு.க. என்றால் ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி இருக்க வேண்டும்.
2500 பேர் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்-ஐ நீக்கினோம். உச்சநீதிமன்ற நீதிபதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
சட்ட விதிகளின்படி 2500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதில் அவர்கள் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையவே கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். செல்லாத நோட்டை பற்றி ஏன் நான் பேச வேண்டும்.
அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது
திமுக ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்பொழுதும் திமுகவுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் நாம் கொண்டு வந்த திட்டத்தை தவிர வேறு திட்டம் ஏதாவது திமுக ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்களா?
7.5% இடஒதுக்கீடு, மருத்துவமனை, தார் சாலைகள், மேம்பாலம், ஏழை பொதுமக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் சேலம் மாவட்டத்தில் காலத்தால் அழியாதவை. அதனால் தான் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாம் கைப்பற்றினோம். திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் ஆளுகின்ற கட்சி அதிமுக தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.
சென்னை:
மத்திய மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார்.
இதற்காக நாளை இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவில் அங்கு தூங்குகிறார்.
பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.
இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்ட மீண்டும் முயற்சிக்கிறார்.
அதற்காகவே நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே சென்னை வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை இரவு இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார். இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றைத்தலைமை அது எடப்பாடி பழனிசாமி. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார் என்றனர்.
- மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
- அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.
விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.
இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசு பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க. அரசு, தற்போது அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
அவர்களுடைய கோரிக்கையே முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2009-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதைக்கூட தி.மு.க. அரசிற்கு நிறைவேற்ற மனமில்லை. மாறாக, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
போராட்டக் குழுவின் நிர்வாகிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. போராடுவது அவர்களது உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதல்-அமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவது நியாயமா என்பதை முதல்-அமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதற்குப் பெயர்தான் "சொன்னதை செய்வோம்" என்பதா? தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.