search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupations"

    அவகாசம் கேட்ட ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்தனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் உள்ள நீர் வழிப்பாதை, குளம், குட்டைகள் அவற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இது போன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை அகற்றும் முயற்சி மேற்கொண்டன.

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலாங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு கடந்த மாதம் காலி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது.அங்குள்ள 217 வீடுகளில் வசிப்போருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் தகுதியுடைய பலருக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது.

    கடந்த சில நாட்கள் முன், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்ட போது எதிர்ப்பு தெரிவித்து சிலர் மறியல் செய்தனர். பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வீடுகள், தேர்வு முடியும் வரை அவகாசம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் அதற்கு சம்மதித்தனர்.

    மற்ற வீடுகள் அனைத்தும் காலி செய்து இடித்து அகற்றப்பட்டது.தற்போது பொது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அவகாசம் கேட்ட ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டது.

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சியின் கடைத்தெரு பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்ததால் கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமி ப்புகளை அதிரடியாக அகற்றினார்.

    குறிப்பாக பட்டுக்கோட்டை வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படு த்தப்பட்டு, உயரபடுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆக்கிரமிப்புகள் இன்றோடு இல்லாமல் தொ டர்ந்து ஆக்கிரமிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

    • சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ உத்தரவு.

    சங்ககிரி:

    சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி மற்றும் எடப்பாடி தாலுகாவில் உள்ள வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை கணக்கெடுத்து மேற்கண்ட துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

    மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) டி.எஸ்.பி. அரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, பி.டி.ஓ. முத்து(சங்ககிரி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான்சேட் (சங்ககிரி), பழனிமுத்து (அரசராமணி) உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக புகார் எழுந்துள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு, மதுரை, பெரியகுளம், திண்டுக்கல் ஆகிய மெயின்ரோடுகளிலும், பஸ் நிலையம் பின்புறமுள்ள காந்திநகர் பகுதி, பேரூராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் சாலைஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது.

    இதனால் பெரும்பாலான சாலைகள் சுருங்கியே காணப்பட்டது. கொடைக்கானல், குமுளி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் வத்தலக்குண்டு வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

    மேலும் முகூர்த்த நாட்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் விதிகளை மீறி அதிவேக மாக செல்லும் ஷேர்ஆட்டோக்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தமான செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி இறுதிகெடு விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அன்று பெயரளவுக்கு மட்டுமே அளவீடு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக உள்ளது. ஆனால் சாலையோரங்களில் உள்ள ஏழை வியாபாரிகளிடம் மட்டும் அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வரவேற்க்கத்தக்கது. ஆனால் பெரும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஏழை வியாபாரிகளிடம் மட்டும் கெடுபிடி காட்டி வருகின்றனர். திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு ஓடை மற்றும் 2 சாலைகள் மாயமாகி உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெயின்ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் மட்டும் தினந்தோறும் கடைகளை எடுக்கச்சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நேர்மையான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×