search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offenders"

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • மன்னார்குடியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
    • அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    மன்னார்குடி:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    நகரச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார்.

    அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.ம.மு.க. நகர செயலாளர் ஆனந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சி.சி.டி.வி காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்ற–வாளிகளை தேடி வந்தனர்.
    • 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.

    இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப் படையில் போலீஸ்

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ்காரர்கள் புகழேந்தி, திருக்குமரன், கோதண்டம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த தனிப்டையினர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில், தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த ராஜ் (வயது 29), ஆனந்த் (31), கோபிநாத் (19), பிரகலாதன் (19) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்–பட்டவர்களிடம் இருந்து 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்ட 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பூரணசந்திரன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.
    • குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கட்ட ராஜா என்கிற பூரணசந்திரன் (வயது24) மற்றும் கொண்டல் பகுதியை சேர்ந்த ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (22) ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று இருவரை கைது செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பட்டதாரி வாலிபர் பிரேம் (31) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து (46) நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருவை யாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொட ர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

    ×