என் மலர்
நீங்கள் தேடியது "Officer Inspection"
- கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது.
- மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.
அந்த நிதியின் மூலம் அச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிறைந்த இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்தும், பல்வேறு இடங்களில் பழுது நீக்கியும் சீரமைத்தனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், சாலையை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர், சாலையை அகலப்படுத்திய இடத்தை பார்வையிட்டு அதன் தரத்தையும், தளத்தின் அளவுகளையும் பார்வை யிட்டார்.
தொடர்ந்து, சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
- மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் சோதனை
- வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை கொண்டு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலையில் அத்தனாவூர் அடுத்த பழதோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.
ஏலகிரி மலையில் ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவிகளும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. மாணவிகளுக்கு விடுதிகள் இல்லாமல் இருந்தது. பின்பு 2 வருடங்களுக்கு முன் தாட்கோ நிதியின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று பழங்குடியினர் நலம் மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் அரசு பழங்குடியினர் விடுதிகளை திடிரென ஆய்வு செய்தார்.
மேலும் இங்குள்ள மாணவர்கள் தங்கும் இடத்தையும், கழிப்பிடங்களையும், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஏலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட பழங்குடியினர் அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா?
- முதல்- அமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் மற்றும் நிலுவையில் உள்ள தணிக்கைகள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து என டாக்டர்களிடம் எடுத்துரைத்தார்.
அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.
- கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
- புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.
கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார்.
- வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டார்
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு ஆரணி வட்டாரக்கல்வி அலுவலர் அருணகிரி திடீர் ஆய்வு செய்தார்.
பள்ளி வளாகம், வகுப்பறை வண்ணம் தீட்டுதல் பள்ளியின் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டார்.
இதில் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- அதிகாரிகள் உடனிருந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.
- பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சோதனை
- குடிசைகளை அகற்றி மாற்று இடம் வழங்க உத்தரவு
வந்தவாசி:
வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி கலெக்டர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார்.
இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்று மாறும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டார். மழைக்காலங்களில் குடிசைவாழ் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார்.
தாசில்தார் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரத் தலைவர் ஜலால், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.
- கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளகோவில்.அக்.12-
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை ஆலோசகர் அர்ச்சுனன், மிகவும் பழமையான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அங்காளம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.
- காட்டுப்புத்தூர் பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திருச்சி :
பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ்.மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார், ஆகியோரின் அறிவுரைகளின்படி, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண். 15- காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.06, தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் ஆகியவற்றை செயல்அலுவலர் ச.சாகுல் அமீதுஆய்வுமேற்கொண்டார்.
மேலும், பேருந்துநிலையம் மற்றும் பாரதியார் தெருவில் உள்ள 2பொதுகழிப்பிடங்கள், அனைத்து வார்டுகளிலும் உள்ள 16 -சமுதாய கழிப்பிடங்கள்
மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் ஆகியவற்றில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை பாதுக்காப்பான முறையில் மூடிவைத்திடவும், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுற்றி உள்ள இடங்களில் முட்செடிகள் மற்றும் புல்பூண்டுகளை அகற்றி சுத்தமாக வைத்து பராமரித்து பாதுகாத்திட 3 -குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தும் மற்றும் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) உரிமையாளர்கள் மூடி பாதுகாக்காவும், பழுதடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒரு வார காலத்திற்குள் சீரமைத்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போது முறையாக பராமரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க இதன்வழி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா, இளநிலை உதவியாளர்கள் பாரதியார், இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
- விரைவாக பணிகளை முடிக்க உத்தரவு
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
போளூர், செப்.24-
போளூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அரசின் முதன்மைச் செயலாளர் வணிகவரி ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரமான தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிராகரிக்கப்படும் போது அதன் காரணத்தை கணினியில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்று தாசில்தார் கேட்டறிந்தார்.
அவருடன் திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் மற்றும் டி ஆர் ஓ டாக்டர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதே போல் அங்கிருந்து சென்று பேரூராட்சியின் மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது எத்தனை கடைகள் கட்டப்படுகின்றன. இதில் எத்தனை காய் காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் எத்தனை என்று கேட்டறிந்தார் இந்த பணியை எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்றும் கேட்டிருந்தார்.
அப்போது கலெக்டர் முகேஷ் மண்டல அலுவலர் ஜிஜா பாய், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஜ்வான் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணை தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் போளூர் பேரூராட்சியின் உறுப்பினர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உணவின் தரம் குறித்து சோதனை
- மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சம்பத் நேற்று ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பித்தல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்.
இதனைத்தொடர்ந்து பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டிற்குச் சென்று முறையாக மருந்துகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறதா மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதித்த பின்னர் மருந்துகள் வழங்கப் படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மாணவர்கள் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்
- 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னும், எழுத்தும், என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நேரில் சென்று எண்ணும், எழுத்தும், திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேள்வி கேட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்தார்.
அப்போது 1 முதல் 5 வரை திருக்குறள் வாசித்த மாணவன், மற்றும் தூய்மை, சுகாதாரம், குறித்து கேள்வி கேட்கப்பட்டு இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், உடன் இருந்தனர்.