என் மலர்
நீங்கள் தேடியது "OLD AGE"
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். இறந்தி கிடந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அரைக் கை சட்டையும், ஊதா நிறத்தில் கைலியும் அணிந்து இருந்தார். பரமத்திவேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மாத்திரைகளுடன் பஸ் நிலையத்திற்கு வந்திருந்த அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருமை கண்ணு வயது 90 வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
- 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தாயார் அருமை கண்ணு (வயது 90). சம்பவத்தன்று இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), அவரது நண்பர் ராஜபாண்டியன் (37) ஆகிய 2 பேர், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை திருடியதாக கூறப்படுகிறது.
மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அன்பழகன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மூதாட்டி உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
- கண்டெக்டர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார்.
- பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34 ஏ என்ற அரசு டவுன் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறினார்.
இதற்கு கண்டெக்டர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார். டவுன் பஸ்ஸில் இலவச பயணம் என்றால் அடிக்கடி பஸ்ஸில் சென்று வருவீர்களா என கேட்டார்.
இதற்கு அந்த மூதாட்டி, ஏன் இப்படி பேசுகிறீர்கள், நான் கோவிலுக்கு மாலை போட்டு உள்ளேன். அதனால் ஊரிலிருந்து கோவிலுக்கு வந்தேன் என கூறினார்.
இருந்தாலும் தொடர்ந்து கண்டக்டர், அந்த தரக்குறைவாகவே பேசி வந்தார்.
இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் இந்த செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகள் வெளியான தையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையை சேர்ந்த கண்டக்டர் ரமேஷ் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
- வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
புதுச்சேரி:
புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 100 வயது மூதாட்டி தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100). இவரது கணவர் ராயப்பன். அவர் இறந்துவிட்டார்.
மூதாட்டி அஞ்சலை பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார். அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
அவர் 2-வது முறையாக தபால் ஓட்டு போட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.
இதையொட்டி அவருக்கு வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியின் போது தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் தபால் வாக்கு பதிவு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே என் தோலில் சொறி ஏற்பட்டது, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
- இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் பிரையன் ஜான்சன். மூளை செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை உருவாக்கும் கெர்னல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வயதை குறைக்கும் [de -ageing] முயற்சியில் கோடிகளை செலவழித்து கவனம் பெற்றவர். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் டெல்லியில் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லி காற்று மாசுபாடு தாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார். இந்நிலையில் அதுகுறித்து நீண்டதொரு எக்ஸ் பதிவை அவர் எழுதியுள்ளார்.

அதில், இந்தியாவில் இருந்தபோது, மோசமான காற்றின் தரம் காரணமாக இந்த பாட்காஸ்டை சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். நிகில் காமத் ஒரு அன்பான தொகுப்பாளராக இருந்தார். நான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். பிரச்சனை என்னவென்றால், நாங்கள் இருந்த அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்தது. அதை நான் கொண்டு வந்த காற்று சுத்திகரிப்பானால் சுத்திகரிக்க முடியவில்லை.
உள்ளே, காற்றின் தரம் AQI 130 ஆகவும், PM2.5 75 µg/m³ ஆகவும் இருந்தது, இது 24 மணி நேரத்தில் 3.4 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.
இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே, காற்று மாசுபாடு என் தோலில் சொறி ஏற்படுத்தி, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
காற்று மாசுபாடு இந்தியாவில் மிகவும் இயல்பாக பார்க்கப்படுகிறது. அதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அறிவு இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த காற்றால் பிறப்பிலிருந்தே குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். யாரும் முகமூடியையும் அணிவதில்லை. அது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா அதன் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது முழு நாட்டிற்கும் மிகவும் மோசமானது.
நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது எல்லா இடங்களிலும் உடல் பருமனானவர்களைக் கண்டேன். 42.4% அமெரிக்கர்கள் உடல் பருமனாக உள்ளனர். நான் எப்போதும் அவர்களை சுற்றி இருந்ததால், நான் பெரும்பாலும் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஆனால் இந்தியா சென்று திரும்பியதும் அது எனக்கு உறைத்தது.
உடல் பருமன் நீண்ட கால காற்று மாசுபாட்டை விட மோசமானது. அமெரிக்கத் தலைவர்கள் உடல் பருமனை தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை? என்றும் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
- பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில்
- முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
கரூர்:
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55) இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்கிற மணி நாயக்கருடன் (72) கூடா நட்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாளின் தங்கை மகன் 2 ஆண்டுகளாக பழனியம்மாள் வீட்டில் தங்கி ேவலைக்கு சென்று வந்துள்ளார். இது ராமசாமிக்கு பிடிக்காததால் பழனியம்மாளைக் கண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த 2021 ஆகஸ்ட் 3-ந்தேதி பழனியம்மாளின் வீட்டுக்கு ராமசாமி வந்துள்ளார். இதற்கு பழனியம்மாள் எதிர்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராமசாமி அரிவாளால் பழனியம்மாளை வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.
இதில் பழனியம்மாளை ஆபாசமாக திட்டியதற்காக ராமசாமிக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை ரூ.100 அபராதம், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் சிறைததண்டனை ரூ.100 அபராதம், அதை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை விதித்து இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
நமக்கெல்லாம் 60 வயதிலேயே உடல் ஆட்டம் கண்டுவிடுகிறது. இதற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்காதது தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
முதுமைக்குத் தேவையான சத்துக்களுள் பீட்டாகரோட்டின் என்பதும் ஒன்று. இது பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளிப்பழம், மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.அடுத்து வைட்டமின் சி என்பதும் முக்கியமானது. இது முளைகட்டிய தானியங்கள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களிலும் கிடைக்கிறது.

அடுத்து வைட்டமின் ஈ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை, வேர்க்கடலை போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. செலீனியம் என்ற மினரல் முதுமையில் இருப்பவர்களுக்கு அவசியமான தாகும். இது முட்டை, கோழி, மீன், காளான், சிவப்பு அரிசி, வெண்ணெய், சோயாபீன்ஸ், எள் போன்ற உணவுகளில் கிடைக்கிறது.முதுமையில் துத்தநாக குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. இது பூசணி விதை, வெள்ளரி விதை, வறுத்த வேர்க்கடலை, காராமணி, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
முதுமையில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இரும்புச்சத்து ஆட்டுக்கல்லீரல், இறால் மீன், பசலைக்கீரை, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், தர்ப்பூசணி, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் கிடைக்கிறது. இவைகளை நாம் முடிந்த வரையில் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் முதுமையையும், முதுமைக்கால நோய்களையும் தடுக்கலாம்.இவற்றுடன் தினமும் காலையிலோ, மாலையிலோ முக்கால் மணி நேரத்திற்குக் குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். .இவைகளைக் கடைப்பிடித்து வந்தால், முதுமையை வெல்லலாம். 80-90 வயதுகளிலும் ஆரோக்கியமாக வாழலாம்.
மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி