என் மலர்
நீங்கள் தேடியது "Palani temple"
- சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
- அதிகாரிகள் வேலை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர்.
பழனி:
பழனி கோவில் தைப்பூசத்திருவிழாவுக்காக தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் பக்தர்கள் வழிபாட்டுக்காக 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது இந்த வேலை அவர்கள் வைத்து விட்டு திருவிழா நிறைவடைந்ததும் எடுத்துச் சென்று விடுவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வேல் முன்பு நின்று செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் செல்வார்கள். ஆனால் இந்த வேல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழனி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆகியோர் இந்த வேலை அகற்றினர்.
இதனால் பக்தர்கள் மற்றும் வேலை பிரதிஷ்டை செய்த வேல் வழிபாட்டுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பழனி நகரில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் புகார் அளித்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் பழனி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அமைத்த வேல் வைப்பதால் எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.
சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் அதிகாரிகள் இதனை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். எனவே மீண்டும் அதே இடத்தில் வேல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
- பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.
இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
- கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது.
- 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மண்டலபூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளிபொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசதிருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் நடராஜன் தலைமையில் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது. 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
3-ம் நாளாக நேற்று இரவு 10மணிவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் உண்டியல் வருவாயாக ரூ.7கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 கிடைத்துள்ளது. தங்கம் ஒருகிலோ 248கிராம், வெள்ளி 48கிலோ 377கிராம் ஆகியவை கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2529 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளியாலான வேல், மயில், திருமாங்கல்யம், காவடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக திருவிழா குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் மட்டுமே நடந்தது. கடந்த வருடமும் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த வருடம் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் உண்டியல் வருவாய் ரூ.7 கோடிக்குமேல் கிடைத்துள்ளது. பழனி கோவில் உண்டியல் வருவாயில் இதுவரை கிடைத்த அதிக வருவாயாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.
- மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.
நேற்று சஷ்டியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மாத கார்த்திகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி, ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பொழுதில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்டநேரம் வெயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சோர்வடையும் பக்தர்கள் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தபோதும் இலவச தரிசன வரிசையில் நிழல் இருந்ததால் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
எனவே கோடைகாலம் தொடங்கியுள்ளநிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது.
- காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது.
அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.
இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
- சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
- அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.
திருப்பரங்குன்றம்:
தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.
திருச்செந்தூர்:
அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.
பழனி:
ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
சுவாமிமலை:
தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.
திருத்தணி:
சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.
பழமுதிர்ச்சோலை:
தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.
- வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும்.
- தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப்பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வந்தபோது கோவில் கண்காணிப்பாளர் அவர்களை தரக்குறைவாக பேசி சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
எனவே அனைவருக்கும் பொதுவான கோவிலில் சர்வாதிகாரி போல செயல்படும் கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவிக்கையில் கோவிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
- கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.
கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.
- கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல முயற்சித்தனர்.
- இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
- பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
- முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழனி:
பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.
தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.
இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.
அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
- திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
- கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது முக்கிய நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.
திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகி ன்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்களுக்கு கியூ ஆர் கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதனை காண்பித்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின்பெயர் , நாள், நேரம் குறிப்பிட்டு கியூஆர் கோடுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டு ள்ளது.
முடி காணிக்கை செலுத்திய பிறகு மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து அதில் முடி இறக்கும்செய்த தொழிலாளியின் புகைப்பட த்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்போது அதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கோவில் பணியாளர்கள், பக்தர்களை வெளியே அனுப்புகின்றனர்.
மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண்பக்தர்களின் புகைப்படமும் எடுக்கப்படு கிறது. இந்த புதிய நடை முறையால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அறநிலைய த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கை செலுத்து வோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறை ப்படுத்த ப்பட்டுள்ளது.
முடி காணிக்கை செலுத்தவும், முடி இறக்கும் செய்யும் ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவை யில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனை யும் மீறி பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேவஸ்தானம் சார்பில் மொட்டையடிக்கும் பெண்களுக்கு மூன்று ரூ.100 தரிசன டிக்கெட்டுகளுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இவவச டிக்கெட்டு களை பெற்று க்கொண்டு வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டையடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற முறைகேடு களை தவிர்க்கும் வகையில் தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்து கிறார்கள் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்யும் பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழிய ர்களை அடையாளம் காண வும், இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றனர்.