என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Panguni Uthram"
- பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
- தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும்.
எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பொழுது, அது பங்குனி உத்திரம்' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும், நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்த பங்குனித் திருநாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடைபெற்றதும், ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட்சி அம்மன் சொக்கநாதரை மணந்ததும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திர திருநாளில், நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நமது வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும். மணக்கோலம் காண வழிபிறக்கும்.
ஏனெனில் ஆறுமுகமும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமான். கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருநாள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. மறுநாள் (திங்கள்) காலை 10.59 மணிவரை உத்ரம் நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே, ஈசன்மகனே! ஒருகைமுகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்! என்று முன்னோர்கள் பாடியதைப்போல, நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒருசிலர் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய இயலாமல் தவிர்ப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் அமைந்தவர்களுக்கும், வரன்கள் வாசல் வரை வந்து திரும்பிச் செல்லும். அவர்கள் அனைவரும் பங்குனி உத்திர நாளில், முருகப்பெருமானை வழிபட்டால் நலம் யாவும் சேரும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நன்மைகள் வந்து சேரும்.
வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பரிபூரணமாக வைக்கிறோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம் பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும்கோலமாக இல்லாமல் 'நடு வீட்டுக் கோலம்' என்று அழைக்கப்படும்.
முக்கோண, அறுங்கோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இருக்க வேண்டும். கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.
பங்குனி உத்திர வழிபாட்டின் பொழுது மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல் தேன் கதலியோடு, தேனும், தினைமாவும் வைத்து வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவர் அக்கறையோடு நமக்கு அருள்தருவார். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், அஞ்சாத வாழ்வை அளிப்பார். பாலும், பன்னீரும் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ் நாளை நீட்டித்துக்கொடுப்பார்.
- முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
- அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.
கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.
இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.
- கடந்த 29-ந் தேதி கொடியேற்றம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
- பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.
காங்கயம் :
காங்கயம்அருகே மடவளாகத்தில் ஆருத்ர கபாலீ ஸ்வரர்மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த கோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்களின் குல தெய்வங்களாக அரு ள்பாலித்து வருகின்றன.
சமீப காலமாக இக்கோ வில்கள் குலத்தவர், உபய தாரர், நன்கொடையாள ர்கள் மூலம் புனர மைப்பு செய்யப்பட்டு கடந்த 29-ந்தேதி பஞ்சமூ ர்த்திகள் பங்குனி உத்திர 7-ம் ஆண்டு தேர் திருவிழா கிராமசாந்தி , கொடியேற்றம், சுவாமி களின் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொட ங்கியது. தொடர்ந்து யாக பூஜை, தீபாரா தனைமற்றும் 4 குலத்தவ ர்களின் மண்டப கட்டளை, பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா ,திருக்கல்யாண உற்சவம், மற்றும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் ஒயிலாட்டம், பெருசலங்கையாட்டம், மகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சமூ ர்த்திகள் எனும்5 தேர்களும் வண்ண மலர்அலங்கா ரத்துடன் வடம் பிடித்து இழுக்க ப்பட்டது.பல்லாயிர க்கணக்கான பக்தர்கள், குலத்தவர்கள், உபயதா ரர்கள்,நன்கொடையா ளர்கள் உள்பட அனைவரது கரகோஷத்துடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவில்களை சுற்றி சுமார் ¾ கி.மீ., தூரத்திற்கு பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.விழாவில்\எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சின்னராஜ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கல்யாண சுந்தரம், திருப்பூர் மாநகரா ட்சியின் 4-வது மண்டல தலைவரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலா ளருமான இல.பத்மநாபன், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபி ரகாஷ், மாவட்ட பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ,திருப்பூர்மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் குமரது ரை, காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், பாப்பினி பஞ்சாயத்து தலைவர் கலாவதி பழனிசாமி, யூனியன் கவுன்சிலர்களான மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா மகேஷ்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் நாகராஜன், காங்கயம் ஆடிட்டர் சண்மு கசுந்தரம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிைமயாளர்கள் சங்க செயலாளர்தாராபுரம் மணி, திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் அப்பு சிவசுப்பி ரமணியன், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் பழனிசாமி மற்றும் பாப்பினி, வீரசோ ழபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடுவர் ராஜா தலைைமயில் சிறப்பு நகைச்சுவை பட்டிம ன்றமும் நடந்தது.மேலும்பா ரிவேட்டை, தெப்ப உற்சவ வீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 7-ந்தேதி கொடி இறக்குதல், தீர்த்தவாரி, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா முடிவடைந்த து. விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், மருத்து வஉத விக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் தங்கமுத்து தலைமையில் தலைவர் வரதராஜ், செயலாளர் ராமசாமி, பொருளாளர் அர்ஜூனன் முன்னிலையில் கோவிலின் கொங்கு வோளாளர் , தோடை, கண்ணந்தை, காடை, கீரை குலத்தோர் சங்கத்தினரும், பாப்பினி ,வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக அனைவரையும் பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்ன தான கமிட்டி பால சுப்பிர மணியம் மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.
- முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.
- முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தில் உள்ள செல்வ முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் செல்வ முருகனுக்கு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் வள்ளி- தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது
இதைத்தொடர்ந்து முருக பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுவாமி-அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்த னர். மதியம் கோவிலில் நடைபெற்ற அன்னதா னத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு உற்சவர் செல்வமுருகன் மயில்வாகனத்தில் புறப்பாடாகி கால்பிரிவு வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் முருகனை வரவேற்று பூஜை நடத்தி வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகி முருகேசன் செய்திருந்தார்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோவிலில் தீமிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர்.
இதைத்தொடர்ந்து பால முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பால முருகனை தரிசனம் செய்த னர்.
மானாமதுரையில் புறவழிச்சாலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோவிலில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மூலவருக்கும் உற்ச வருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு வழிவிடு முருகன் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தாயமங்லம் ரோட்டில் உள்ள பாம்பன்சுவாமி கோவில், கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோவில், குறிச்சி செந்தில் ஆண்டவர் மற்றும் திருப்புவனம், இளை யான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில் களிலும் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
- பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பழனி:
தமிழ்கடவுள் முருக ப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா க்கோலம் பூண்டிருக்கும் பழனியில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
தைப்பூச திருவிழாவிற்கு அடுத்தபடியாக பங்குனி உத்திரம் அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கொடுமுடி உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து தீர்த்தகாவடி எடுத்துவந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் கிரிவீதியில் ஆடிய காட்சி காண்ப வர்களை பரவசமடைய செய்தது. தற்போது பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால் அடிவாரம், மலைக்கோவில், வின்ச், ரோப்கார் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மலைக்கோவிலில் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்னதானத்திற்கும் நீண்டவரிசையில் காத்திருந்தனர். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருவாரங்களில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படும்.
அப்போது பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் தங்கரத புறப்பாடு முக்கிய நிகழ்ச்சியாகும். பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி கடந்த 2-ந்தேதி முதல் இன்றுவரை தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில்நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது.
அதன்படி கடந்த 5 நாட்களாக சாமி தங்கரத புறப்பாடு நடைபெற வில்லை. நாளை(7-ந்தேதி) முதல் வழக்கம்போல் மலைக்கோவில் வெளி பிரகாரத்தில் தங்கரதபுற ப்பாடு நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன.
- பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, முத்துக்குமார் நகரில் உள்ள பாலமுருகனுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நேற்று செவ்வாய் கிழமை மாலை பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை முத்துகுமார் நகர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதேபோல் எல்.கே.சி. நகரில் உள்ள பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- முருகப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பல்லடம் :
பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
- 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படுகின்ற சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்தூர் தென்கரை சுவாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டது.திருப்பணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், இரவு விசேஷ வாகனத்தில் ஐயன் வீதியுலா நடைபெற்றது
வருகிற 1-ந் தேதி இரவு கிடா வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும். 2-ந் தேதி காலை தளவாய் சுவாமி க்கு கற்பூர தீப ஆராதனை மற்றும் வன்னிய ராஜாக்கள், வீரமணி ஐயனுக்கும், மஹா ராஜேஸ்வரர் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திரம் மதியம் உச்சிகால பூஜை, இரவு வெள்ளிக்குதிரை வாக னத்தில் ஐயன் பாரி வேட்டை வீதி உலா நடைபெறும்.
5-ந் தேதி காலை தேரோட்டம், மதியம் உச்சிகால பூஜை, இரவு புலி வாகனத்தில் ஐயன் வீதி உலா நடைபெறும்.7-ந் தேதி மதியம் உச்சிகால பூஜை, மஞ்சள் நீராட்டு வைபவம் ஐயன் சன்னதி அமரும் தருணம், இரவு கொடி இறக்கத்துடன் முடிவடையும்.
திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகிகள், அனைத்து பூசாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கண்ண நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், செயல் அலுவலர் பொன்னி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன
- பங்குனி உத்திர திருவிழாவின் 10-ம் திருநாள் அன்று இரவு பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக்காரணமானதுமான டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
பங்குனி உத்திரம்
அதன் ஒரு நிகழ்வாக பங்குனி மாதத்தையொட்டி இன்று பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதனையொட்டி சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. இதற்காக காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் கொடிமரத்துக்கு மாபொடி, மஞ்சள், வாசனை பொடி, பால், தயிா், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செங்கோல் விழா
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளான்று ஆலயம் உருவான வரலாறு திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் பணியாளர்கள், பக்தா்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்