என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament"

    • தி.மு.க. சார்பில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
    • அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இன்னும் 100 நாள் வேலை பணியாளர்களின் நிலுவை தொகையை மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்காமல் இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகை தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக்கோரி தி.மு.க. நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மக்களவையில் இன்று 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகை விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெறும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    • பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது.
    • அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் அதை தடுக்கும் வகையில் அல்லது எதிர்க்கட்சி தலைவரை பேசவிடக்கூடாது என ஏதாவது ஒரு வகையில் விவாதத்தை தவிர்க்க பார்க்கிறார்கள்.

    பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. இதற்கு எம்.பி.க்கள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பாராளுமன்ற நடவடிக்கையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றன, ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நாம் காணும் செயல்முறை இதுதான். அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன. இது பார்ப்பதற்கு அனைவருக்கம் மிகவும் புதியதாக இருக்கலாம்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது.
    • 10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.

    கட்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளையம் பறிமுதல் செய்கிறது. படகுகளை திரும்ப பெற அதிக அளவிலான அபராதம் விதிக்கிறது.

    தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் தமிழக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் அளித்த பதில் பின்வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. 454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

    10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.

    இவ்வாறு வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.

    • 2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன.
    • இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    பிஐபி-யின் (Press Information Bureau) உண்மை கண்டறியும் பிரிவு கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 19ஆம் தேதி வரை போலி செய்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுதல் தொடர்பாக 1575 செய்திகளை கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அஷ்வினி விஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

    2022ஆம் ஆண்டு 25,626 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 8,107 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 338 செய்திகள் போலியானது என கண்டறியப்பட்டது.

    2023ஆம் அண்டு 20,684 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,623 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 557 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,320 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    தற்போது மார்ச் 19ஆம் தேதி வரை 6,320 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன இதில் 1,811 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 97 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    • கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது.
    • அணுக்கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப்போவதில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அதன் ஆபத்து குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.

    நேரமில்லா நேரத்தின்போது வைகோ பேசியதாவது:-

    குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒன்றிய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

    நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார்.

    அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். மக்களவையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை.

    இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இதுபற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

    அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள்.

    இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்.

    கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

    கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது.

    பேரழிவு ஏற்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும்.

    இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக்கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப்போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன். ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது.

    இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதில். அணுமின் நிலையம் 2018ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது.

    அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றமானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது, இந்த அணுக் கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப் போவதில்லை. அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், பிரதமர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்."

    வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

    • 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்தியில், மத்திய அரசு எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தியுள்ளது.

    இதனுடன், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் (ALLOWANCE) மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

    • பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பின.
    • கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடகா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் டெல்லி நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று பாராளுமன்ற மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதேவேளையில் கர்நாடகா மாநில அரசும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

    இதனைத்தொடர்ந்து அவையை நடத்த முடியாத அளவிற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாஜக பொய்யான பிரச்சினையால் பாராளுமன்றத்தை முடக்க வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இன்று பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பாஜக முற்றிலும் போலியான பிரச்சனையுடன் வந்தது. இதனால் மிகவும் முக்கியமான பிரச்சினையான நீதிபதி யஷ்வந்த் வர்மா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற முடியாமல் போனது" எனத் தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தி "பாஜக அவையை நடத்த விடக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. இன்றோடு பல நாட்கள் இதுபோன்று அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த சாக்குபோக்கு அல்லது வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்" என்றார்.

    "விரக்தியடைந்த பாஜக, அதன் மாநில மற்றும் மத்தியத் தலைமை மற்றும் அதன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் காங்கிரஸ் கட்சியையும் என்னையும் அவதூறு செய்ய என் மீது பொய்யான அறிக்கைகளைச் சுமத்தி வெட்கக்கேடான மற்றும் அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றனர்" என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • திமுகவினரின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
    • தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் மக்களவையில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில், தொகதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி இன்றும் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனால் அவை கூடியதும் தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

    திமுகவினரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தமிழக எம்.பி.க்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
    • Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.

    போராட்டத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும்" என்று தெரிவித்தார்.

    வரும் 22 ஆம் தேதி சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    • பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

    மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

    இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.

    நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
    • சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.

    அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார். 

    • தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார்.
    • பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது. பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.

    இதனையடுத்து, மக்களவையில் பிரதமர் மோடி, முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இன்று பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    மேல் சபையிலும் தொகுதி மறுவரையரை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு கட்டாயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். 

    ×