என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "parrot"
- பாரிஜாத மலரினால் சிகிச்சை செய்தால், கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்று கூறினார்.
- அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.
ஒரு சமயம் விஜய நகர மன்னர் பிரபு தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார்.
மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான், பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால்,
கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும், இப்பணியை செய்ய வல்லவர் அருணகிரிநாதார்தாம் என்றும் கூறினார்.
மன்னரும் இதை ஏற்று, அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.
பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால்,
ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார்.
உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார்.
ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.
தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.
இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
- அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
- அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,
தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.
அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.
ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
- பம்பை இசை, பூஜையின் போதும் கிளி தலை மீது இருந்து நகருவதே கிடையாது.
- மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதா கவும் கதை வரலாறுகள் உள்ளது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது இருகூர் கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதாகவும் கதை வரலாறுகள் உள்ளது.
மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்வது வழக்கம். இதனை பக்தர்களும் தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டும் அதே போல ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜைகளின் போது, மாசாணியம்மன் தலையிலும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி ஊஞ்சலிலும் கிளி அமர்ந்து தரிசனம் தந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கிளி அமர்ந்து தரிசனம் கொடுத்து வருகிறது.
இதனை காண்பதற்காகவும், கிளி அம்மன் தலையில் அமர்ந்திருப்பதை தரிசிப்பதற்காகவும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளளது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்ட னைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் மதுரை செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடு படுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று செல்லூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். எனவே கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற 17-ந் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை மீறி கிளிகளை வீட்டில் வளர்த்தால் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- செய்தியாளரின் ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
- நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாற்றிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்து வந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை அலேக்காக திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.
நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த கிளி, அவரது ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). பிட்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முருகேசன் தனது வீட்டில் 1 வருடமாக ஸ்ரீ என்ற பச்சை கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளியை முருகேசனின் மகனின் நண்பர் பரிசளித்து இருந்தார். வீட்டில் உள்ள அனைவரிடமும் பாசமாக பழகும் இந்த கிளி முருகேசனின் மனைவி விஜயலட்சுமியை பப்பு என்று அழைக்கும்.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன், அவரது மனைவி, மகன்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேல் பகுதிக்கு சென்று கிளி அமர்ந்து கொண்டது. கிளியை முருகேசனின் மகன் மிரட்டும் வகையில் போ என்று கூறி உள்ளார். இதில் கோபம் அடைந்த கிளி பறந்து சென்றது. நீண்ட நேரம் ஆகியும் கிளி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கிளியை முருகேசன் அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது கிளி அந்த பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இருப்பது தெரிய வந்தது.
அங்கு சென்று முருகேசன் பார்த்தபோது கிளி கோவிலில் உள்ள அம்மன் சிலையின் வலது தோளில் அமர்ந்து இருந்தது. கிளியை முருகேசன் ஸ்ரீ வா வா என்று பல முறை அழைத்தார். ஆனால் கிளி வரவில்லை. மேலும் கடந்த 2 நாட்களாக கிளி அம்மன் சிலையை விட்டு கீழே இறங்கவில்லை.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. கிளியை பார்க்க அங்கு ஏராளமானோர் திரண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்து இருப்பது போல இந்த கிளியும் அமர்ந்து இருந்ததால் பொதுமக்கள் கிளியை அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து கிளியின் உரிமையாளர் முருகேசன் கூறும்போது
ஸ்ரீ எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லாது. மிளகாய் பழம், கொய்யா பழம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். பேசும், கோபம் வந்தால் யாரிடமும் பேசாமல் இருக்கும். என் மகன் போ என்று கோபமாக கூறியதால் கோபித்துக்கொண்டு பறந்து சென்ற கிளி அம்மன் மேல் அமர்ந்துள்ளது. எவ்வளவு அழைத்தும் வரவில்லை. எனவே கிளியை அம்மனுக்கே காணிக்கையாக வழங்குகிறேன் என்றார்.
கடந்த 2 நாட்களாக அம்மன் சிலையின் மீது அமர்ந்து இருந்த கிளி இன்று காலை பறந்து சென்றது.
வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிய ஏழு பறவை இனங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை ‘ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ணகிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண, சீவர் பஞ்சவர்ணகிளி, டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’ ஆகும்.
இப்பறவைகள் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படுபவை. இந்த புதிய பறவையினங்கள் சென்னையில் மீட்கப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VandalurPark
ஆரணி:
ஆரணியில் அரியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று இரவு அரியாத்தம்மன் உற்சவர் சிலை மதுரை மீனாட்சியம்மனை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அப்போது, அம்மனின் வலது கையில் உள்ள பழத்தின் மேல் உண்மையான பச்சைக்கிளி திடீரென வந்து உட்கார்ந்து அருள்பாலித்தது. கிளி பழத்தை கொத்தி கொத்தி கொத்தி சாப்பிட்டு சத்தமிட்டது.
பக்தர்கள் அம்மன் கையில் அமர்ந்த கிளியை பார்த்து பரவசமடைந்தனர். இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூஜையின்போது மீனாட்சியம்மன் முகத்தில் கிளி கொஞ்சி விளையாடியது. அருள்பாலித்த கிளியை ரசித்த பக்தர்கள் மெய் மறந்து மீனாட்சியம்மனை வழிபட்டனர். #MeenakshiAmman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்