search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peasants"

    • நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீா்ப்பாசனம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
    • தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் விற்பனைக்குழு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை சார்பில் பருத்தி விலை நிலவரம் தொடர்பாக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அரசு அலுவ லர்களுடனான கலந்த ஆலோசனை கூட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் விற்பனைக்கு குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

    (வேளாண்மை) கோமதிதங்கம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தாட்சாயினி, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பிரியமாலினி, விற்பனை மேலாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்க. காசிநாதன், நாக. முருகேசன், கண்ணன், சுப்பிரமணியன், முரளிதரன், காதர் உசேன் மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பருத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

    நிகழாண்டு பருத்தி விளைச்சலும் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்ய முன் வந்தால் மட்டுமே விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

    இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

    உடனே வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.

    உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  

    ×