என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "petrol bunk"
- மகாராஜன் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 67). இவர் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
பட்டப்பகலில் கொள்ளை
நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து 2 வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு வந்தனர். அப்போது மகாராஜனிடம் ரூ. 200-க்கு பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென அவரது பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில் ரூ. 22 ஆயிரத்து 470 இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி யடைந்த மகாராஜன் இது தொடர்பாக குலசேக ரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். பட்டப்பக லில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்படை தீவிரம்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெட்ரோல் பங்க் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மகாராஜனை தாக்கிய 2 வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை சேகரித்த போலீசார் கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420, டீசல் ரூ.400 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம் விலை உயர்வு என இரு முனை தாக்குதலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கவும் வேண்டியதிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சில்லரை விற்பனை பெட்ரோல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் 40 சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் வினியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த சாந்தா சில்வா தெரிவித்தார்.
கொழும்பு புறநகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருளை பதுக்குவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.
- சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
- டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை :
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.65 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்குகளில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைவதுடன், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி கூறியதாவது:-
கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
- பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
உடுமலை :
குடிமங்கலம் காவல் நிலைய சரகம் பெதப்பம்பட்டி எச்.பி. பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் மற்றும் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் உத்தரவுப்படி உடுமலை துணைகாவல் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல்மேற்பார்வையில்குடிமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன், தலைமை காவலர் காமராஜ்,முதல் நிலை காவலர்கலைச்செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இதில் திருட்டு மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகள் சிலம்பரசன் (24), சாந்தி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் திருடிய பணம் மற்றும் பொருட்களை மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்காரர் பாலுசாமி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பெட்ரோல் பங்குகள் நாளை (14-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் மறுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என்ற அறிவிப்பு மே 14-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்ற தவறான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை, மத்திய சிறை-1 புழல் மற்றும் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்க சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் 22 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து முடிந்ததையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக 23 தண்டனை கைதிகளை கொண்டு நடத்தப்படுகிற பெட்ரோல் பங்க் இதுவே ஆகும். இங்கு 3 ஷிப்ட்டுகளில் கைதிகள் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு பெட்ரோல் பங்க் ஊழிர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சிறை துறைக்கு மாதம் ரூ. 43 ஆயிரம் அளிக்கும். மேலும் சிறை கைதிகளுக்கு சம்பளமும் வழங்கும். இந்த பெட்ரோல் பங்கில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட போர்வை, துண்டு, காக்கி துணி மற்றும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏ.டி.எம். வசதியும் உள்ளது. இங்கு 6 பம்பிங் மிஷின்கள் உள்ளது. அடுத்தகட்டமாக பாரதியார் ரோட்டில் சிறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்தநிகழ்ச்சியில் சிறைவாசிகள், சிறை பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami #PetrolBunk
ஆரணி:
ஆரணி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகின்றன. அவற்றில் கடந்த 1 மாதம் காலமாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சிலர் சில்லரை கேட்பது போல் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது சம்மந்தமாக ஆரணி நகர மற்றும் கிராமிய போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. இந்நிலையில் ஆரணி திருவண்ணாமலை சாலை முள்ளிபட்டு கூட்ரோடு அருகில் உள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் ஒரு மர்மநபர் வந்து பெட்ரோல் பங்க் மேலாளர் பரதனிடம் சில்லரை கேட்பது போல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்க வந்து பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 36).
இவர் உக்கடம் அருகே பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியதும் ஊழியர் பணம் கேட்ட போது பீர் முகமது தகாத வார்த்தைகளால் திட்டினார். பங்க் ஊழியர்கள் அவரை கண்டித்தனர்.
இதனால் ஆவேசமடைந்த பீர்முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.
கைதான பீர் முகமது மீது ஏற்கனவே இதுபோல 3 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானார்.
ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. தற்போது 4-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க மாநில தலைவர் முரளி கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவமும் 4,850 பெட்ரோல் பங்குகள் உள்ளன. தற்போது தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை நிறுத்தினால் பொதுமக்களுக்கு மேலும் இடையூறு ஏற்படும்.
ஆகையால் பெட்ரோல் பங்க்கை மூடி எதிர்ப்பை காட்ட வேண்டாம் என எண்ணுகிறோம். எனவே நாளை பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ரோட்டில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வீதம் 77 ஆயிரம் பேருக்கு ரூ.50 கோடி மதிப்பில் விலையில்லா நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தினையும் மற்றும் முதல் முறையாக மேற்கு மாவட்டங்களை சார்ந்த ஏழை பெண்களுக்கு 12000 கறவை பசுக்களும் தொடர்ந்து விலையில்லா ஆடுகளும் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கவுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 4.9.1935 முதல் செயல்பட தொடங்கிய நாளில் இருந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது சங்கத்தில் 8560 உறுப்பினர்களை கொண்டு ரூ.15.25 லட்சம் பங்கு மூலதனத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், விவசாய பெருங்குடி மக்களிடம் விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை பணியினையும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகள் அரசு ஆதார விலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளிடம் கொப்பரைகள் ரூ.65 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சங்கத்தின் சார்பில் செயல்படும் அம்மா மருந்தகம் பொது மக்களுக்கு மருத்துவ சேவையினை புரிந்து ரூ.4.90 கோடிக்கு விற்பனை இலக்கினை எட்டியுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு சுமார் 70 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி., சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், முன்னாள் வாரியத்தலைவர் லியாகத், இந்துஸ்தான் பெட்ரோலிய மண்டல மேலாளர் நாகேஷ், துணைப்பதிவாளார்கள் சண்முகவேலு, திருமாவளவன், கூட்டுறவு சார்பதிவாளார்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், அப்துல் கபாப், நிர்மலா, கூட்டுறவு சங்க மேலாளார் ரவி, அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்த முருகன், சுரேஷ் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவு அவர்கள் சோழவரம் போலீசுக்கு போன் செய்து, ‘‘மர்மகும்பல் கண்ணாடி கதவை உடைத்து புகுந்து ரூ.19 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என்று பதட்டத்துடன் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஊழியர்கள் முருகன், சுரேஷ் இருவரும் கொள்ளை நடந்ததாக நாடகமாடி ரூ.19 ஆயிரத்தை சுருட்டியது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்