search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pettition"

    • தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்பி வருகிறது.
    • வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.

    திருப்பூர்:

    தமிழ்நாடு வணிகத்துறை சார்பில் அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினார். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட்டுமாறு அறிக்கை அனுப்பப்படுகிறது.

    வாட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும்போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட்பது நியாயமான ஒன்றல்ல. மேலும் வணிக வரித்துறை உத்தரவின்படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

    எனவே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வியாபார பரிவர்த்தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம்பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங்களில் இருந்து மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் மற்றொரு மனுவில், பனியன் தொழிலில் வெளி மாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப்பித்து 1 சதவீத வரி செலுத்தும் ஆணை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003-ம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.

    எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குகளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாக ப்பாநகர், அருளான ந்தம்மா ள்நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகு மான்நகர், ரெட்டி ப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்ப ல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோ ட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
    • மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ம், தரங்கம்பாடி தாலுகாவில் பெரிய மடப்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செம்பனார்கோவில், ஆக்கூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதனால், இக்கிராம த்துக்கு மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி காவேரி டெல்டா பாசனதாரர் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு கோபிகணேசன் தலை மையில் பெரியமடப்புரம், மாத்தூர், முக்கரும்பூர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×