search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pharmacy"

    • மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.
    • நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில், மருந்தியல் கல்லுாரி சார்பில், 62-ம் ஆண்டு மருந்தியல் வார விழா தொடங்கியது.

    தொடக்க விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    அறக்கட்டளை துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறை டீன் தனலட்சுமி வரவேற்று, குத்து விளக்கேற்றினார்.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

    விழாவையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    நாளை உளுந்துார்பேட்டையில் மருத்துவ முகாம் நடக்கிறது. துணைப்பேராசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.
    • தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை மேலாண் தலைவர் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழா வினை துவங்கி வைத்தார்.

    இதில் முதன்மை விருந்தி னராக சர்வதேச வணிக துணை பொது மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சர்வதேச வணிகத்தில் தொழில்மு னைவு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் இன்றியமை யான்மை குறித்து விரிவாக எடுத்து ரைத்தார்.

    தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது . இதில் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் நடுவராக பணியாற்றினார்.

    முன்னதாக கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மாரிய ம்மாள் நன்றி கூறினார் னார். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்திஷ்வரன், அலுவலக மேலாளர் ராஜா மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
    • ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மருந்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர், முதுநிலை மருந்தக ஆய்வாளர், மருந்தக ஆய்வாளர் என பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    கட்டுப்பாட்டுத்துறை தொடர்பான பிரச்னைகளை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு 2003ல் புதிய கமிட்டி ஒன்றை நியமித்தது.அந்த கமிட்டி பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு 200 மருந்துக்கடைகளுக்கு ஒரு மருந்தக ஆய்வாளர் எனும் விகிதத்தை கடைபிடிக்க அறிவுறுத்தியது.

    அந்த நிலையே தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.அவர்களுக்கு தனியே அலுவலகம் கிடையாது. மருந்துகள் துறை தொடர்பான கோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு விளக்கம் அளிக்க ஆய்வாளர்களே சென்னை செல்ல வேண்டியுள்ளது. குறைந்தது 6 முதல் 8 ஆய்வாளர் பணியில் இருந்தால் அவ்வப்போது மருந்தகங்களில் தேவையான சோதனை மேற்கொள்ள முடியும்.

    ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே முறையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையைக் கண்டறிந்து தடுக்க போதிய எண்ணிக்கையில், மருந்தக ஆய்வாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

    • விருதுநகர் அருகே மருந்துகடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தலைபாண்டி (வயது 27). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தலைபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அவரது சகோதரர் முத்துப்பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சி, கே.வலையப்பட்டி கிராமத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமை தாங்கினார். சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பெரியகருப்பன் விழாவில் கலந்து கொண்டு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் மருத்துவச்சேவை பெறுவதற்காக நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியதை தவிர்த்து, நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதனை அறிந்து கொள்வதற்கு ேபர் பயன் பெற்றனர்.

    நடப்பாண்டான 2022-2023-லும் 36 முகாம்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு ஏப்ரல் 2022 முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் 14 ஆயிரத்து 800 ேபர் பயன்பெற்றுள்ளனர்.

    இந்த முகாமில் பொது மருத்துவர்மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவத்துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், கொரோன தடுப்பூசி. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, இணை இயக்குநர்(மரு த்துவப்பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்(சுகாதாரத்துறை) ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×