search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் உள்ளனர்.

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சி, கே.வலையப்பட்டி கிராமத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமை தாங்கினார். சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பெரியகருப்பன் விழாவில் கலந்து கொண்டு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் மருத்துவச்சேவை பெறுவதற்காக நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியதை தவிர்த்து, நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதனை அறிந்து கொள்வதற்கு ேபர் பயன் பெற்றனர்.

    நடப்பாண்டான 2022-2023-லும் 36 முகாம்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு ஏப்ரல் 2022 முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் 14 ஆயிரத்து 800 ேபர் பயன்பெற்றுள்ளனர்.

    இந்த முகாமில் பொது மருத்துவர்மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவத்துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், கொரோன தடுப்பூசி. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.

    காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, இணை இயக்குநர்(மரு த்துவப்பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்(சுகாதாரத்துறை) ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×