என் மலர்
நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"
- கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் முடிவு செய்தார்.
- பிரதமர் அலுவலகத்திற்கு கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து கடிதம் எழுதப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் முடிவு செய்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து கடிதம் எழுதப்பட்டது.
அதில் கேரள வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கேரள தலைமை செயலாளர் ஜாய் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க கேரள அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசில் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது.
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க அவர் டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியை கேரள முதல் மந்திரி இன்று சந்தித்துப் பேசினார்.
- டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது
- கண்ணூரில் ஸ்ரீநாராயணா கல்லூரியில் நடந்த விழாவில் பினராயி விஜயன் பங்கேற்றார்.
- நிகழ்ச்சி தொடங்கியதும், முதலில் குருவணக்கம் பாடல் பாடப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.
முதல் மந்திரியாக பினராயி விஜயன், 2-வது முறையாக ஆட்சி செய்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் பங்கேற்கும் போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம்.
பல நேரங்களில் இது சர்ச்சையை ஏற்படுத்தும். என்றாலும் அவர் தனது கருத்துகளில் இருந்து பின்வாங்குவதில்லை.
இந்த நிலையில் கண்ணூரில் ஸ்ரீநாராயணா கல்லூரியில் நடந்த விழாவில் பினராயி விஜயன் பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்கியதும், முதலில் குருவணக்கம் பாடல் பாடப்பட்டது.
அப்போது மேடையில் இருந்த பினராயி விஜயன், பாடல் பாடும் போது எழுந்து நிற்கவில்லை. மற்றவர்கள் எழுந்து நின்ற போது அவரும், மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. கடனபள்ளி ராமச்சந்திரனும் அமர்ந்தே இருந்தனர்.
இந்த படங்கள் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறும் போது, கூட்டம் தொடங்கும் போது குருவணக்கம் பாடுவது வழக்கம். குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் எழுந்து நின்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர் நிற்காமல், அமர்ந்தே இருந்தது தவறு. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
தற்போது கேரள அரசியலில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார்.
- போலீஸ் அதிகாரி உமேஷ் கோழிக்கோட்டில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். அதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டனர். இதையடுத்து அவர் கோழிக்கோட்டில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- கவர்னரின் விமான பயணத்திற்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும்.
- கவர்னரின் விமான பயணத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.30 லட்சம் ஒதுக்குமாறு நிதி துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கவர்னரின் விமான பயணத்திற்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும். கடந்த நிதி ஆண்டில் இதற்காக மாநில அரசு ரூ.11.8 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தது.
இந்த நிதி செலவாகி விட்டதாகவும், இதில் இன்னும் ரூ.1.15 லட்சம் மட்டுமே மீதி இருப்பதாகவும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் கேரள நிதித்துறை இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் கவர்னரின் பயண செலவுக்கான நிதியை விடுவிக்காமல் இருந்தது.
கேரளாவில் குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்க வந்தபோது இதுபற்றி கவர்னர் ஆரிப் முகமது கான் அவரிடம் தெரிவித்தார். மேலும் விமான பயணத்திற்கு வரும் நிதி ஆண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.
இதையடுத்து கவர்னரின் விமான பயணத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.30 லட்சம் ஒதுக்குமாறு நிதி துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து நிதித்துறை கவர்னர் ஆரிப் முகமது கானின் விமான பயண செலவுக்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
- கர்நாடகாவை பா.ஜ.க.வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.
- மதக்கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா உள்ளது.
திருவனந்தபுரம்:
கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அது பா.ஜ.க.வால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 1,700 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பையே நிரந்தரமாக தடை செய்து விட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒரு போதும் கர்நாடகாவிற்கு பாதுகாப்பு கிடைக்காது" என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:-
கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும், கர்நாடகாவை பா.ஜ.க.வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித்ஷா கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார். அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு? கேரளாவில் அனைத்து மத மக்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாக வாழ முடியும்.
ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது? மதக்கலவரங்கள் நிகழும் மாநிலமாக அது உள்ளது. சிக்மகளூருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் கடந்த 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள சிறுபான்மை மக்கள் சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்த தீங்கும் நேருவதில்லை. இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரளாவில் இதுவரை 12 பேர் முதல்-மந்திரிகளாக பதவி வகித்து உள்ளனர்.
- 12 பேரில் நீண்ட காலம் பதவி வகித்த முதல் மந்திரிகளில் ஈ.கே.நாயனார் முதல் இடத்தில் உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி விஜயன், 2021-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கேரளாவில் அதிக காலம் முதல்-மந்திரி பதவி வகித்தவர்களில் பினராயி விஜயன் 4-வது இடத்தில் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் இதுவரை 12 பேர் முதல்-மந்திரிகளாக பதவி வகித்து உள்ளனர். இவர்களில் நீண்ட காலம் பதவி வகித்த முதல் மந்திரிகளில் ஈ.கே. நாயனார் முதல் இடத்தில் உள்ளார். இவர் 10 ஆண்டுகள் 353 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
2-வது இடத்தில் கே.கருணாகரன் உள்ளார். இவர் 8 ஆண்டுகள் 315 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். 3-வது இடத்தில் அச்சுதாமேனன் 7 ஆண்டுகள் 80 நாட்கள் பதவி வகித்துள்ளார். இப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயன் 6 ஆண்டுகள் 268 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.
உம்மன் சாண்டி 6 ஆண்டுகள் 256 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.
- பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பினராய் விஜயன் செல்லும் பாதையில் கறுப்பு சட்டை அணிந்து செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கோழிக்கோட்டில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவிற்கு கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு கலரில் மாஸ்க் அணிந்து சென்ற மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கேரளாவில் முதல்-மந்திரி செல்லும் பாதையில் கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
- ஸ்வப்னா சுரேஷ்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதானவர் ஸ்வப்னா சுரேஷ்.
இவருக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி? என்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கேரள சட்டசபையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஆளும் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்வப்னா சுரேசுக்கும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர்.
பினராய் விஜயனும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கு பதில் அளித்து ஸ்வப்னா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை. இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார்.
அதன்பின்புதான் எனக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க்கில் வேலை கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்வப்னா சுரேசின் பேட்டியை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.
- நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் நன்றி கூறுகிறார்.
நாகர்கோவில்:
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களும் இதனை கடைபிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். உயர்சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 18 சமுதாயங்களை சேர்ந்த பெண்கள் திறந்த மார்புடன் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. இதற்கு எதிராக 1822-ல் போராட்டம் வெடித்தது. அதனை தொடர்ந்து மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட், ஆங்கிலேய தளபதி கர்னல் நேவால் என்பவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதன் பயனாக பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் 1823-ல் வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக அனைத்து சமூகத்தினரும் தோள் சீலை அணிய தொடங்கினர்.
சனாதன சாதி பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட இந்த தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவையொட்டி நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் வருகிற 6-ந்தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கே.டி. உதயம், டாக்டர் பினுலால் சிங், மரியசிசுகுமார், வக்கீல் வெற்றிவேல், செல்லசுவாமி, சுபாஷ் சந்திரபோஸ், மாத்தூர் ஜெயன், திருமாவேந்தன், சுல்பிகர் அலி, ஷாஜஹான், வெற்றிவேந்தன், நாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வரவேற்கிறார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுக உரை வழங்குகிறார். பால பிரஜாபதி அடிகள், விஜய்வசந்த் எம்.பி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பேசுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் நன்றி கூறுகிறார்.
- தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
இந்தியா முழுவதும் பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நடத்தப்படுகிறது.
நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்கிறார்கள்.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விழா மேடை மற்றும் மைதானத்தை ஆய்வு செய்தனர்.
மாநாட்டையொட்டி இன்று நாகர்கோவில் நாகராஜாதிடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் மின்னொளியில் ஜொலிக்கிறது. கூட்டணி கட்சியினர் அமர தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோல விழாவுக்கு வரும் தொண்டர்கள் அமரவும், நிகழ்ச்சிகளை காணவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வருகிறார்.
இதுபோல தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். தோள் சீலை போராட்ட மாநாடு முடிவடைந்த பின்னர் அவர் இன்று இரவு நாகர்கோவிலில் தங்குகிறார். இதனால் அவர் தங்கும் விருந்தினர் மாளிகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
+2
- கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
- பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது.
நாகர்கோவில்:
தோள் சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.