என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus 2"

    • பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.
    • பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்.

    சென்னை:

    புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் பன்மொழி கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக் கையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி. எஸ்.இ.) தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரை இந்திய மொழிகளில் கல்வியை வழங்க முடிவு செய்துள்ளது.

    தற்போது பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆங்கிலமும் ஒரு சில பள்ளிகளில் இந்தியிலும் கற்பித்தல் பணி நடக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020-யானது பள்ளிகளில் தொடங்கி உயர்கல்வி வரை முழுவதும் வீட்டு மொழி, தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்றுவிக்கும் முறையை கொண்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட் டத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு திட்டமி டப்பட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களை தயாரிக்க மத்திய கல்வி மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

    பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டு இந்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் புதிய பள்ளி பாடத்திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மொழியியல் பன்முகத்தன்மை, கலாச்சார புரிதல் மற்றும் மாணவர்கள் இடையே கல்வியை வளர்ப்பதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையாக பன்மொழி கல்வி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது.

    சி.பி.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளை பயன்படுத்த பரிசீலிக்கலாம். இது மாணவர்களுக்கு பன்மொழியில் அறிவாற்றலை வளர்க்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக அவர்கள் பல மொழிகளில் வெளியாகும்போது அடிப்படை நிலையில் இருந்து அவர்களின் தாய் மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்த முடிகிறது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

    22 அட்டவணைப் படுத்தப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.

    இது குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்கு விப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது நாட்டில் 28,886 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    • 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
    • தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலை.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்த தேர்தலில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

    • +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்.
    • உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது.

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது.

    இந்நிலையில், நாளை பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 

    உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

    தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

    பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.

    • விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளி யாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தற்போது துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அர சுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    ஜூன் 24 மொழிப்பாடம், ஜூன் 25-ஆங்கிலம், ஜூன் 26-கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28-கணினி அறிவியல், புள்ளிவிவரங் கள், உயிர் வேதியியல், ஜூன் 28-இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங் கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.

    ஜூலை 2-மொழிப் பாடம், ஜூலை 3-ஆங்கிலம், ஜூலை 4-இயற்பியல், பொருளியல், ஜூலை 5-கணினி அறிவியல், தொடர்பி யல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6-தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 7 மையங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 7 மையங்களில் இன்று தொடங்கியது
    நெல்லை:

     எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. 

    இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.  மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 


    நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.  விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 மையங்களும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் நாங்குநேரியில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளிகளில் 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.  

    இந்தப்பணிகளில் முதன்மை தேர்வானர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், உதவி தேர்வானர்கள் என சுமார் 900 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


    விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி 8-ந் தேதி தொடங்க உள்ளது. 


    தென்காசி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக  தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அதுபோல பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தென்காசி தனியார் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியில் 910 ஆசிரியர்கள், 42 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது.
    • தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    சென்னை :

    2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது. இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, தேர்வில் தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனுமதிக் காதது, தேர்வு எழுதாதது, உடல் நலமின்மை, தொழில் புரிதல், கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமையில் கல்லூரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இயலாத நிலை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு பெறாததாலும், சில காரணங்களினாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில் மொத்தம் 10 ஆயிரத்து 725 பேர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய் இருக்கின்றனர்.

    இவர்களில் 2 ஆயிரத்து 711 பேருக்கு மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அந்தவகையில், வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்தப்பட வேண்டும்.

    அந்த முகாமில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 2 நாட்களுக்கு முன்னதாக அழைத்து பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் கலெக்டர் அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிற துறையின் ஒத்துழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
    • இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

    அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த பிளஸ்-௨ மாணவி காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்தி நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்களது மகள் பவித்ரா (17) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போது மாணவி பவித்ரா பள்ளிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் தேடியும், விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் எழுதி இருந்தனர்.
    • நெல்லையில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ைவ 43 அரசு பள்ளிகளில் இருந்து 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 53 பள்ளிகளில் இருந்து 3,363 மாணவர்கள், 4,063 மாணவிகள் என ெமாத்தம் 7,426 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 2,912 மாணவர்கள், 3,909 மாணவிகள் என 6,821 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.85 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 56 அரசு பள்ளிகளில் இருந்து 1,848 மாணவர்கள், 2,735 மாணவிகள் என மொத்தம் 4,583 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 1,650 மாணவர்கள், 2,637 மாணவிகள் என மொத்தம் 4,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

    10-ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் 84 அரசு பள்ளிகளில் இருந்து 6,152 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,211 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில் இருந்து 7,177 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6,059 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.42 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 86 அரசு பள்ளிகளில் இருந்து 5,103 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

    ×