என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police man"
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த 23 வயது இளம்பெண் ஒருவர் உறவினர் பாதுகாப்பில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு உறவினர்கள் சென்னையில் டிரைவர் வேலை பார்க்கும் வாலிபரை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். திருமண நிச்சயத்திற்கு பிறகு இளம்பெண்ணும், டிரைவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் டிரைவரை பார்க்க இளம்பெண் தனியாக சென்றார்.
சென்னை சென்ற இளம்பெண் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி சென்னையில் உள்ள டிரைவரை உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், சென்னை கோயம்பேட்டில் நிற்பதாக எனக்கு போன் செய்தார்.
அன்று நான், வெளியூர் சவாரி சென்றிருந்தேன். இதனால் அந்த பெண்ணை உடனடியாக ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினேன், என்றார். அந்த பெண் ஊர் திரும்பாததால் அவர், சென்னையில் மாயமாகி இருக்கவேண்டும் என்று உறவினர்கள் கருதினர்.
மாயமான பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் மனு கொடுத்தனர். அவர், மாயமான பெண்ணை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.
தனிப்படை போலீசார் பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவரிடம் பெண் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றினர். அந்த எண்ணுக்கு சொந்தமான நபரை கண்டுபிடிக்க முயன்றனர்.
இதில் அந்த எண்ணுக்குரிய நபர் சென்னையைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது. அந்த பெண்ணின் பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் அந்த சென்னை பெண் விபசார கும்பலுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. இதன் மூலம் டிரைவரை தேடி சென்னை சென்ற குமரி பெண் விபசார கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீசாருக்கு ஏற்பட்டது.
அவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விபசார கும்பலுடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர், குமரி பெண்ணை சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.
குமரி தனிப்படை போலீசார் சென்னை போலீஸ்காரரையும் கண்டுபிடித்து விசாரித்தனர். இதில், குமரி பெண்ணை கடத்தி சென்றது விபசார கும்பலைச் சேர்ந்த பெண்ணும், சென்னை போலீஸ்காரரும்தான் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று குமரி பெண், கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட குமரி பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற விபசார கும்பலைச் சேர்ந்த பெண், சென்னை போலீஸ்காரர் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவில் அழைத்து வந்தனர். இங்கு வந்ததும் மீட்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட டிரைவரை தேடி சென்னைக்கு சென்றேன். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து டிரைவரின் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நின்றேன். அப்போது பெண் ஒருவர் என்னிடம் வந்து விவரம் கேட்டார். அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். அந்த பெண், என்னை டிரைவர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.
மேலும் டிரைவர் சென்னையில் வேலை பார்ப்பதால் எனக்கும், சென்னையிலேயே வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக அவருக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்தார். அந்த போலீஸ்காரர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரிடமிருந்து தப்பி வெளியே வந்தேன். சாலையில் நடந்து சென்றபோது, இன்னொரு வாலிபரும் என்னை கடத்திச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்தார். பின்னர் ஊருக்கு வர ரெயில் நிலையம் வந்தபோது, குமரி மாவட்ட போலீசார் என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
பின்னர் மேலும் பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறும்போது, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர், கூறும் தகவலின்பேரில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குலசேகரம்:
குமரி மாவட்டம் நித்திர விளை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (வயது 26).
இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ் நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். அஜின்ராஜை பேச்சிப்பாறை அருகே கோதையாறில் செயல்படும் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமித்திருந்தனர். அங்கு அவருடன் மேலும் சில போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை அஜின்ராஜும், கணேசன் என்ற இன்னொரு போலீஸ்காரரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோதையாறில் உள்ள மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக கணேசன் சென்றுவிட்டார்.
பொருட்களை வாங்கிக் கொண்டு கணேசன் கோதையாறு மின்நிலையத்திற்கு திரும்பிச் சென்ற போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போலீஸ்காரர் அஜின்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார்.
உடனே இதுபற்றி பேச்சிப்பாறை போலீசாருக்கு கணேசன் தகவல் கொடுத்தார். இங்கிருந்து இன்ஸ் பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கோதையாறு மின் நிலையத்திற்கு விரைந்து உள்ளனர். போலீசார் விசாரணையில்தான் அஜின்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தெரியவரும்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இதனை கண்டித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் வலியுறுத்தினர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வீட்டின் முன்பு ஒரு புகார் மனு கொடுக்க போவதாக கூடி நின்றார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நள்ளிரவு 11.30 மணி ஆகிவிட்டதால் மறுநாள் காலையில் மனு கொடுக்கு மாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் வக்கீல்களும், அவருடன் வந்தவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியரையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது சில லாரிகள் அபராதம் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க போவதாக அவர்கள் கூடி அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு பாளை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.
இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் சதீஸ் மோகன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் ஆகியோர் உட்பட 15 பேர் மீது போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னையைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ரஜினிகாந்த். இவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கும் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் போலீஸ் ஏட்டு ரஜினிகாந்த் நேற்று சேத்துப்பட்டில் உள்ள கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு கள்ளக் காதலியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதுபற்றி அந்த பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஏட்டு ரஜினிகாந்தை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன் கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் போலீசார் மீது புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 107 பட்டாசு பெட்டிகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட் 38 ஜோடிகள், பெண்களுக்கான 6 சுடிதார்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் இந்த பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோரையும், இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலாஜி உள்பட 4 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?, யாரிடமாவது வாங்கி வைத்தனரா? என்றும் பட்டாசு பெட்டிகள், புதிய துணி மணிகளை தீபாவளிக்காக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்துள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.
ராமநாதபுரம்:
சத்திரக்குடி அருகேயுள்ள இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாத துரை (வயது 47). இவர் ராமநாதபுரத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று தனியார் பஸ்சில் சென்றபோது காலியாக உள்ள சீட்டில் அமர்ந்து உள்ளார். ‘இது ஏற்கனவே இடம் பிடித்த இடம், எழுந்து விடுங்கள்’ என்று பரமக்குடியைச் சேர்ந்த ராஜேந்திர பிரபு (38) என்பவர் தகராறு செய்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டர் முரளி (26), செக்கர் சூரிய பிரகாஷ் (20) ஆகியோர் சேர்ந்து கொண்டு காசிநாத துரையை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து தலைமை காவலரை தாக்கிய 3 பேரையும் கைது செய்தார்.
வாலாஜா:
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 36). கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து போலீஸ்காரர் அடிக்கடி கல்பனா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயது நிரம்பிய மூத்த மகளை அடைய அவர் விரும்பினார்.
மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு கள்ளக்காதலியை வற்புறுத்தினார். கல்பனா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மகள் மீதான மோகத்தில் இருந்த கள்ளக்காதலனை இனிமேல் தன்னை சந்திக்க வீட்டிற்கு வர வேண்டாம் என்று கல்பனா எச்சரித்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் கல்பனா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள்கள் கதறி அழுதனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, கல்பனாவின் மூத்த மகள் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், தன்னுடைய தாய்க்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தால் தன்னை திருமணம் செய்து வைக்க குமரேசன் சண்டை போட்டார்.
தாய் மறுத்தார். இந்த ஆத்திரத்தில் என்னுடைய தாயை போலீஸ்காரர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக அப்துல்சலீம் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதேபோலீஸ் நிலையத்தில் சத்யராஜ் (32) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவெண்ணைநல்லூரை அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.
பின்னர் அங்கு பணியை முடித்து கொண்டு உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அப்துல்சலீம் ஓட்டி வந்தார்.
பெரியசெவலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அப்துல்சலீம், சத்ய ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்