என் மலர்
நீங்கள் தேடியது "Police raid"
- வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நடந்தது
- மெட்டல் டிெடக்டருடன் தீவிர கண்காணிப்பு
அரக்கோணம்:
கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், பிளாட்பாரம் மற்றும் ரெயில் நிலைய வளாகம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் மெட்டல் டிடக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
- பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சா கார்த்திக். அஸ்தம்பட்டி அருகே, ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி. பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கீர்த்தி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு, தாதகாப்பட்டி கேட், ஆஞ்சநேயர் கோவில் அருகே வைத்து பிச்சா கார்த்தியை தாக்கினார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க ஜீவானந்தம் என்பவர் வந்தபோது, போலீசார் வாகன சோதனையில் அவர் பிடிபட்டார்.
விசாரணையில், ராமு என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கீர்த்தி, பரத், மணி, கவியரசு ஆகியோர் மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.
இதில் ஜீவானந்தத்தை தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதுவை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.
இதற்கிடையே புதுவை மாநிலத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் புதுவையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் வந்தது.
மேலும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகளும் அவரவர் வீடுகளில் பதுங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி புதுவை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசாரின் அதிரடி சோதனையால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
- மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.
விக்கிரவாண்டி:
இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.
அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது.
- விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
- அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.
இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.
இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
- அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
சேலம்:
சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
போலீசில் புகார்
உடனே அந்த பெண் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த வாலிபர் வெளியே வந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அந்த பெண் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை சில்மிஷம் செய்தவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
- சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.
2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.
இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அந்த கம்பெனிக்கு அருகில் உள்ள டீக்கடையில் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டம் ஒலப்பிடுக்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்வாக் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.
அப்போது இவர் களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.பின்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் உள்ள இளம்பெண்ணின் சித்தப்பா வீடான குடி யிருப்புக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ள னர்.தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்ப தாக முகமது அஸ்வாக் மீது இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முகமது அஸ்வாக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.
திருப்பூர்:
நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.
- டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
- ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.
பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.