என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police transfer"
- சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமனம்.
- தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம்.
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சுஜித் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட எஸ்பியாக நிஷா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட எஸ்பியாக மதிவாணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட எஸ்பியாக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி. டேம், மகராஜகடை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
ஓசூர் உட்கோட்டத்தில் ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலூர், பேரிகை, சூளகிரி, நல்லூர் ஆகிய 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இதேபோல பர்கூர் உட்கோட்டத்தில் பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய 5 போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, மத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களும் உள்ளன.
இதைத் தவிர ஓசூரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகமும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, பர்கூரில் தலா ஒரு மகளிர் போலீஸ் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.
இதில் பலர் உட்கோட்டத்திற்குள் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சிலர் உட்கோட்டம் விட்டு மற்றொரு உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, போலீசார் பலர் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இடமாறுதல் கோரி, விண்ணப்பித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்ற உத்தரவு வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.
- மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார்.
- கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருக்காலம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, போலீசார், கரும்பு தோட்டத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தப்பவிட்ட சங்கராபுரம் போலீசார் 3 பேரை உடனடியாக ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.
- போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
- ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.
அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.
- கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர்- 2 போலீசாரை பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் காளிராஜ்.
மேலும் இந்த காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் ராமர் பாண்டி மற்றும் சுவாதிராஜ். இவர்களைப் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், போலீசார் ராமர்பாண்டியன், சுவாதிராஜ் ஆகியோரை சிவகங்கை மாவட்டத்திற்கும் பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு மஞ்சுளா உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏட்டுகள் ராஜதுரை திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், காளிதாசன் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ராஜேந்திரன் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கும், ஆரோக்கியதாஸ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், கண்ணன் சங்கராபுரத்திற்கும், போலீஸ்காரர்கள் ரவி கீழ்குப்பத்திற்கும், சக்திவேல் வளவனூருக்கும், ராமலிங்கம் கரியாலூருக்கும், வசந்தராஜன், ரமேஷ் ஆகியோர் திருவெண்ணைநல்லூருக்கும், பசுபதி மரக்காணத்திற்கும், பூங்கொடி ஒலக்கூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் 5 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வந்த சுரேஷ், பிரகாஷ்குமார், சத்தியநாராயணன், சுபாஷ், சரவணன், கோபிநாதன், செல்வத்துரை உள்ளிட்ட 27 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்