என் மலர்
நீங்கள் தேடியது "Porkizhi"
- புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
- கண்காட்சியில், சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு,
பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.
- இயக்க பணிகளை பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
- மாநில இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுகூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.
வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் நந்தினி, பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி, பேரூர் செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தாய்மொழியான தமிழை காக்க, உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தை வருகிற 25-ந் தேதி திருப்பூர், பல்லடம்,அவினாசி ஆகிய இடங்களில் மாநில மாணவரணி சார்பில் நடத்துவது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சியோடு பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் 70 வயதை கடந்த 6 உறுப்பினர் அட்டைகளை வைத்துள்ள, தி.மு.க.வுக்காக உழைத்த முன்னோடிகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பொற்கிழி வழங்கி அவர்களின் இயக்க பணிகளை பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
இதில் மாநில இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை உரிய காலத்துக்குள் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தி.மு.க.வின் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழா கடையநல்லூரில் நடைபெற்றது
- கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார்
தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த தி.மு.க.வின் மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் விழா தி.மு.க. சார்பில் கடையநல்லூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் கலந்து கொண்டு கடையநல்லூர் மயிலா நகர் பகுதி சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடி பிச்சைக்கனிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரிப், மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் சேகனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத், கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கவுன்சிலர் முகைதீன் கனி, அருணாசல பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பூஜைகள் செய்தனர்.
- குருபூஜை விழாவின்ேபாது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலை அடுத்த திம்மக்குடியில் வரதராஜன் சகோதரர்கள் 1500 கிலோ எடையில் 23 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்ட ஐம்பொன்னாலான உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடித்துள்ளனர்.
இந்த ஐம்பொன் சிலையை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பூஜைகள் செய்து வணங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்:-
உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடித்த திம்மக்குடி வரதராஜன் சகோதரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் மூலம் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் 25 இடங்களில் நடைபெறும்.
அவற்றில் திருமுறை பயிற்சி மையங்கள் 112 செயல்படுவதாகவும் அவற்றில் பயின்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு–தோறும் திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெறும் குருபூஜை விழாவின் போது விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சையில் கட்சி கொடியேற்று விழா, கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்க தலைவர்கள் படத்திறப்பு விழா, கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
- கழகம் காத்த வேங்கைராயன்குடிகாட்டைச் சேர்ந்த குழந்தைவேலு உள்பட மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று தஞ்சையில் கட்சி கொடியேற்று விழா, கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் படத்திறப்பு விழா, கழகம் காத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ , தலைமை தாங்கினார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் 80 அடி உயர பிரம்மாண்ட கம்பத்தில் தி.மு.க. கொடியை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, ஏற்றி வைத்தார். பின்னர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி, டாக்டர் நடசேனார், டி.எம்.நாயர், பி.டி. தியாகராயர், பனகல் அரசர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களை திறந்து வைத்தார். இதையடுத்து கழகம் காத்த வேங்கைராயன்கு டிகாட்டைச் சேர்ந்த குழந்தைவேலு உள்பட மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் புதிய ரோடு ஸ்வீப்பிங் எந்திர பணிகளை மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, தலைமை கொறடா கோவி செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி, மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, முரசொலி, செல்வகுமார், உலகநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், தலைமைக்கழக நிர்வாகி இறைவன், மாவட்ட நிர்வாகிகள் எல்.ஜி. அண்ணா, புண்ணியமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு தஞ்சை நகரின் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.