என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post-mortem"

    • கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
    • சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர். கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.இவர் இன்று காலை திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகம் எதி ரில் உள்ள கடை யின் அருகே வந்து அமர்ந்துள்ளார் .பின்பு அந்த இடத்தில் படுத்தவர் வெகு நேரம் படுத்து இருந்ததால், சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பொது மக்கள் போலீஸ் நிலை யத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவர் யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து பின்பு அவரது ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு தகவல் தெரி வித்தனர். பின்பு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    • எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது.
    • மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வசிக்கும் சாமிகண்ணு. இவரது மனைவி மலர்கொடி வயது 46, தினகூலி தொழிலாளி. இன்று காலை திட்டக்குடி பொன்னுசாமி நகரில் 3-வது கிராசில் உள்ள ஆசைத்தம்பி வீட்டின் மேல் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த மலர்கொடி மற்றும் கூலி தொழிலாளர்களுடன் சாப்பிட்டுவிட்டு பின் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வீட்டு மாடியில் பின்புறம் தண்ணீரை ஊற்றினார்.   

      அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.   இறந்து போன மலர்கொ டியின் உடலை பார்த்து கூலித் தொழிலாளிகள் கதறி அழுததால் அப்போதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

    • கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார்.
    • இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது.

    கடலூர்:

    காட்டுமன்னா ர்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் வெள்ளாலர் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). ஜவுளிக் கடையில் பணி செய்து வந்தார். ஜவுளிக்கடையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் பிஸ்கட் கேட்டனர். இதனை வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.

    அப்போது வடவாற்ற ங்கரை ஓரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு கால் கழுவ சென்றார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் தலை குப்புற விழுந்து விட்டார். இதில் மூச்சுத் திணறி இறந்து விட்டார். இதையடுத்து இன்று காலை இவரது உடல் வாய்க்கால் நீரில் மிதந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்  இத்தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டு போலீசாரிடம் ஓப்படைத்தனர் பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையோரம் பிணமாக கிடந்தார்
    • போலீஸ் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). விவசாயி.

    இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை விட்டு தனது மொபட்டில் வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் சண்டியூர் அடுத்த சர்வீஸ் சாலை யோரம் பழனிச்சாமி மர்மமான முறையில் இன்று அதிகாலை இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விவசாயி உடலை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையின் ஓரம் இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. குழந்தையின் சடலத்தில் இருந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசியது யார்? குழந்தை கள்ளக்காதலால் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா? அல்லது குழந்தை இறந்ததால் வீசி சென்றார்களா? குறை பிரசவத்தில் இறந்த குழந்தையை சாலையோரம் வீசினார்களா? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது.
    • அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் இறந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது. இத்தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என்றும், அதிக குடிபோதையில் இறந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேவராஜின் மனைவி ஜாய்ஸ் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.
    • கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 35).

    இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி- சிறுவாணி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ஜனவரி 30-ந் தேதி தேவராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தேவராஜின் உடலை புலியகுளம் அருகே உள்ள சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

    இந்தநிலையில் தேவராஜின் மனைவி ஜாய்ஸ் என்பவர் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். எனவே மீண்டும் தனது கணவர் தேவராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட தேவராஜின் உடல் இன்று மீண்டும் ேதாண்டி எடுக்கப்படுகிறது. அவரது உடலை கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

    • வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.
    • மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூரில் மெக்கானிக் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக்குகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற 3 பேர் டீ குடிக்க கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தனர். இவர்கள் வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேேய உடல் நசுங்கி உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். இதேபோல சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீதும் டிப்பர் லாரி மோதியது. அவரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பாரி (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கே.சுரேஷ், இ.சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை. பலத்த காயமடைந்த மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மெக்கானிக் கூட்டத்திற்கு வந்தவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக போலீசாருக்குக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த நபரை குறித்து விசாரணை நடத்தியபோது இறந்த நபர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பதும். நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் மகன் உள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தின் மகன் பாலச்சந்தரிடம் கேட்டபோது எனது தந்தைக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து எனது அம்மாவிடமும், என்னிடம் பிரச்சனை செய்வார். இதனால் இவரை விட்டு பிரிந்து நாங்கள் கடலூருக்கு சென்று விட்டோம். நான் சென்னையில் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். இந்நிலையில் என து தந்தை இறந்து விட்டார் என்று செய்தி கேட்டு நான் சென்னையில் இருந்து பண்ருட்டிக்கு வருவதாக அவர் கூறினார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
    • கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது25). டிரைவர்.

    அருண்கார்த்திக் கடந்த 10-ந் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    அவரது தந்தை மகனை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும், அவர்களும் நாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளனர். இதையடுத்து கணேசன் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.

    மேலும் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அருண்கார்த்திக்கின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது போலீசாருக்கு எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), அரவிந்த் என்ற அருண்ராஜ் (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அவர்களை பிடித்து விசாரித்த போது முதலில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்கார்த்திக்கை அடித்து கொன்று, உடலை கல்குவாரி அருகே புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் எஸ்.சந்திராபுரத்தில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு அருண்கார்த்திக்கை கொன்று குப்பை, மணல் போட்டு புதைத்த இடத்தை காண்பித்தனர்.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. பிருந்தா, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அங்கு அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    அருண்கார்த்திக் எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் எப்போதும் ஒன்றாக மது குடிப்பதையும், சூதாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.

    தொடர்ந்து ஒன்றாக சந்தித்து கொண்டதால் நாங்கள் 3 பேரும் நண்பர்களாக மாறிவிட்டோம். எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக தான் செல்வோம்.

    அருண் கார்த்திக், எங்கள் 2 பேரிடம் பணம் கேட்டார். நாங்களும் நண்பர் என்பதால் எங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தோம். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை.

    இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனை தொடர்ந்து அவர் எங்களுடன் சேருவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று நாங்கள் அருண்கார்த்திக்கு போன் செய்து, பணம் சம்பந்தமாக நாம் சமாதானமாக சென்று விடலாம்.

    முன்பு போல நாம் நண்பர்களாக இருப்போம் என கூறி சமாதானம் பேசுவதற்கு அழைத்தோம். அவரும் வந்தார். பின்னர் 3 பேரும் எஸ்.சந்திராபுரத்தில் பாறைமேடு பகுதிக்கு சென்று மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு எழுந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த கட்டையை எடுத்து அருண்கார்த்திக்கை தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

    அவர் இறந்துவிட்டதால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே அவரது உடலை மறைத்து விட முடிவு செய்தோம். அதன்படி அங்கு குழி தோண்டி உடலை உள்ளே தூக்கி போட்டு, மணல் மற்றும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து போட்டு மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.

    அருண்கார்த்திக்கின் தந்தை எங்களிடம் வந்து கேட்டபோது, நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்ததோடு, அவருடன் இணைந்து தேடுவது போலவும் நாடகமாடினோம்.

    ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே கொன்று புதைக்கப்பட்ட அருண்கார்த்திக்கின் உடல் போலீசார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை நண்பர்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
    • இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சூசை நாதன் மகன் மரிய ஜோசப் (30) இவர் மஞ்சக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரிய ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×