search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி நகர்.

    பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐசியுவிற்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்

    சென்னை:

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்

    இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

    • குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
    • இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையடுத்து அழிஞ்சிவாக்கம், ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, கணேஷ் நகர், சாய் கிருபா நகர், ஸ்ரீநகர், இருளிப்பட்டு, எம்.கே. கார்டன் விருந்தாவனம் நகர்,போக்காரிய சத்திரம், ஜெகநாதபுரம், ஆமூர், நெடுவரம்பாக்கம் மாலிவாக்கம், சத்திரம், குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை இருளிப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
    • மின்சார நிறுத்தத்தால் ஏராளமான தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது.

    அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்த ஆண்டில் இது 10-வது நாடுதழுவிய மின் நிறுத்தம் ஆகும்.

    இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மறு சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

    நங்கநல்லூர்:- பி.வி. நகர், எம்.ஜி.ஆர். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ. காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி நீட்டிப்பு, எஸ்.பி.ஐ. காலனி மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பாநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி 3-வது தெரு, டி.என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46-வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர்,

    எஸ்.பி.ஐ. காலனி 3-வது ஸ்டேஜ், 1-வது பகுதி, 2-வது மற்றும் 4-வது மெயின் ரோடு 43-45 தெரு, நேரு காலனி பகுதி, 5-வது மெயின் ரோடு பகுதி 39-42 தெரு, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, காலேஜ் ரோடு, வேம்புலி அம்மன் தெரு 4-வது மெயின் ரோடு, இந்து காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் நாளை (04.11.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரைமின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

    மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:-

    வியாசார்பாடி: காசா கிராண்ட் & ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், விபிசி நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், தணிகாச்சலம் நகர் - இ பிளாக் & எப் பிளாக், கவுரி நகர், பாலகிருஷ்ணா நகர், ஐயப்பன் நகர், பரசுராம் நகர், லட்சுமி நகர், தணிகை நகர், வசந்தம் நகர், காமாட்சி நகர், வித்யா நகர், நடேசன் நகர், திருமலை நகர், ஜிஎன்டி சாலை, ஞானபதி தோட்டம், விஜிபி சந்தோஷ் நகர், விபிசி நகர், காமாட்சியம்மன் நகர், கந்தன் நகர், சீனிவாச நகர், கற்பகம் நகர், பிருந்தாவன் தோட்டம், பி.ஏ.மேடு, பெரியார் சாலை, நேதாஜி தெரு, தணிகாசலம் நகர் இ பிளாக், படேல் தெரு, ஐயர் தோட்டம், வாசுதேவன் தோட்டம், மெரிடியன் மருத்துவமனை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், விஜயா பார்க், ஏரிக்கரை, உமையாள் கல்யாண மண்டபம், சிஎம்டிஏ மொத்த பரப்பளவு, சீத்தாபதி மொத்தம், நடராஜ் நகர் 1 முதல் 5 வரை, கில்பர்ன் நகர், RR நகர் , சண்முக சுந்தரம் நகர் , 200 அடி சாலை , குருராகவேந்திரா நகர், கன்னியம்மன் நகர், வடபெரும்பாக்கம், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், பாலாஜி நகர் , கந்தசாமி நகர் , தணிகாசலம் நகர் , திருமலை நகர் , வி.எஸ். மணி நகர், கிருஷ்ணா நகர், சீக்ரெட்ஸ் காலனி, சரஸ்வதி நகர், சின்ன தோப்பு, ரங்கா கோ ஆப்பரேட்டிவ் நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், விநாயகபுரம், லோட்டஸ் காலனி, சாமி நகர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • புதுவண்ணாரப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் நாளை மின்தடை.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு முனை மின்தடை சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ. கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரத ராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர்,மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு.

    ஈஞ்சம்பாக்கம்: 1-வது அவென்யூ வெட்டுவாங்கேனி, அக்கரை கிராமம், அல்லிகுளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்திவேந்தன் சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலை ஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்லேவ், காப்பர் பீச் ரோடு, டாக்டர்.நஞ்சுண்டாராவ் சாலை, கிழக்கு கடற் கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக் கம் முதல் வெட்டுவாங்கேனி இணைப்பு சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், அனுமன் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4-வது தெரு, கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி.அவென்யூ,

    மரியக்காயர் நகர், நயினார்குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர், என். ஆர்.ஐ.லே அவுட், வி.ஜி.பி. லே அவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு மற்றும் பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிரஸ் டீஜ் மற்றும் மந்திரி, ராஜன் நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிப், சீஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1-வது மற்றும் 2-வது தெரு, டி.வி.எஸ் அவென்யூ, ஆசி ரியர்கள் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி.தெரு, விமலா கார்டன், ஜூகு பீச்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி பகுதிகளில் மின்தடை.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    டைடல் பூங்கா:

    தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம். ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கனகம்), வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர். எம்.இசட். மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.ஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்திநகர், அடையாறு பகுதி.

    ராஜகீழ்பாக்கம்:

    டெலஸ் அவென்யூ பேஸ்-1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோவில் தெரு, அருள் நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷம் அவென்யூ, ஜெயந்திரா நகர் மெயின்.

    நாப்பாளையம்:

    மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதிநகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையான்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டக்கரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப்.நகர், சுப்ரமணி நகர்.

    மாங்காடு:

    கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தில்லை கங்கா நகர்: சக்தி நகர், பாலாஜி நகர் 1 முதல் 15-வது தெருக்கள் வரை, நேதாஜி காலனி 5 முதல் 9-வது தெருக்கள் வரை, ஏ.ஜி.எஸ். காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட்ஸ், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர்.

    சிட்கோ திருமுல்லைவாயல்: எல்லம்பேட்டை, அம்பேத்கர் நகர், அன்னை இந்திரா நினைவு நகர், வீரப்பாண்டி நகர், நாகாத்தம்மன் நகர், இ.ஜி.நகர்.

    பெரியார் நகர்: எஸ்.ஆர்.பி.கோவில் தெற்கு மற்றும் வடக்கு தெரு, ஜி.கே.எம்.காலனி மற்றும் பெரியார் நகர் அனைத்து தெருக்கள், வெங்கட்ராமன் சாலை, ஜெகநாதன் சாலை, ஜவ ஹர் நகர், ஜவஹர் நகர் வட்ட சாலை, லோகோ திட்டம், லோகோ ஒர்க்ஸ் சாலை, கார்த்திகேயன் சாலை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராக வன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ.கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோவில் தெரு.

    கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.

    வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
    • நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

    சென்னை:

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மின் தடை காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

    மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×