search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prejudice"

    • காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    புர்கா அணிந்து வந்த ஒரே காரணத்தால் பெண் ஒருவர் உணவகத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் கிளைகள் கொண்டுள்ள கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு தனது கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நபீஸா என்ற இஸலாமிய பெண் ஒருவர் நேற்றிரவு உணவருந்த சென்றுள்ளார்.

    ஹோட்டலில் அதிக கூட்டம் இருந்ததால் ஒருவர் பின் ஒருவராக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தனது குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க சென்றுள்ளார்.

    ஆனால் உணவக மேனேஜர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டதாக தெரியவில்லை. காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து இரண்டொரு முறை மேனேஜரிடம் கேட்டும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பலர் உணவருந்திவிட்டு எழுந்து சென்ற நிலையில் இருக்கைகள் காலியாக இருந்ததாக நபீஸா கூறுகிறார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நபீஷாவின் கணவர் சென்று கேட்ட பிறகு அவர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆர்டர் செய்த உணவை கொண்டுவர மேலும் 1 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். இதுகுறித்து மேனேஜரிடம் கேட்டபொழுது தங்களை துளியும் பொருட்படுத்தாமல் அவர் அங்கிருந்து சென்றார் என்றும் அவர் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    இதுகுறித்து நபீஸா தனது பேஸ்புக் பதிவில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எனது வாழ்நாளில் தற்போது சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை. என்று தெரிவித்துள்ளார். 

    • திடீரென கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தாக்குதலில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் ( வயது 40).

    இவர் நேற்று இரவு கொள்ளிடத்திலிருந்து மகேந்திர பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஆரப்பள்ளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிவபாலன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனே காரில் இருந்து மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை அரிவாளால் தாக்கினர். சிவபாலனும் திருப்பி தாக்கியுள்ளார்.

    இதில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலச்சந்திரனை கைது செய்தனர். செல்வமணிக்கும் சிவபாலனுக்கும் கடந்த 4 வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதனால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ரிஷிவந்தியம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 46). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராமநாதன் அவரது வீட்டுமனையில் மின்இணைப்பு பெற சர்வீஸ் பெட்டியை வைத்துள்ளார். இதை பார்த்த பிச்சன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல், மூர்த்தி ஆகியோர் சர்வீஸ் பெட்டியை சேதப்படுத்தி, இந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்றும், இடத்தை உரிமை கொண்டாடினால் கொலை செய்து விடுவோம் என்று ராமநாதனை மிரட்டிய தாக தொிகிறது. இதுகுறித்து ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் பிச்சன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.

    • அலங்காநல்லூர் வியாபாரி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி பகுதியில் கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து விற்பனை செய்து வருபவர் பாலன் (வயது45). இவர் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது எஸ்.வி.டி நகர் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பாலனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கா நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை, கோச்சடையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (21), மற்றும் ஆரப்பாளையம், நாக நகரை சேர்ந்த பொன்முருகன் என்ற ஆதி (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.

    பாலனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்த தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரி வித்துள்ளது.

    தொடர்ந்து இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

    • தமிழரசன்(26) இவர் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக, அதேபகுதியிலுள்ள 3பேரும் அவரை அசிங்கமாக பேசினர்.
    • தொடர்ந்து, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

    கடலுார்:

    வடலூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் தமிழரசன்(26) இவர் அதே பகுதியில் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக , பார்வதிபுரத்தை சேர்ந்த கலையரசன்(31) பரஞ்ஜோதி (22) ஜெயபிரகாஷ் (27) ஆகிய 3 பேர்களும் தமிழரசனை அசிங்கமாகபேசி, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது, இதுகுறித்து வடலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இைத தொடர்ந்து கலையரசன், பரஞ்ஜோதி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும்வடலூர் புதுநகர் அரசு பள்ளி அருகில் ரோந்து சென்ற ேபாலீசார் கைது செய்தனர்.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இரும்பை மகாகளேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. உஷாரான ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஏரிக்கரை பகுதிக்கு ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோட்டக்கரையை சேர்ந்த குமரவேல், சந்துரு, சங்கர் மனைவி சரஸ்வதி, அவரது மகன் மனோஜ், குமரவேல் மனைவி சாந்தி, ஏழுமலை, புதுவை கருவடிகுப்பத்தை சேர்ந்த குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை முன்விரோதத்தில் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சரஸ்வதி, மனோஜ், சாந்தி ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மீதம் உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது அவர்கள் திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சிக்னல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    ×