search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private company employee"

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர்.
    • அய்யப்பன் புதுக்கோட்டை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றிரவு நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தென்மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 39) இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிள் மூலமாக திருபுவனக்கு சென்று திரும்பி வருவார் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்பேரிலிருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போனது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி காந்திஜி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (48). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று மாலை முருகேசன் வேலைக்கு சென்று விட்டார்.

    அவரது மனைவி, மகன், மகள் பக்கத்து வீட்டில் உதவிக்கு சென்றனர். இரவு அவர்கள் அங்கு தூங்கி விட்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு முருகேசன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் பிரெஸ்லெட், 4 பவுன் நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போய் இருந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குபதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    தியாகராய நகரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். மாணவியை கடத்திய தனியார் நிறுவன ஊழியர் சோக்சோ சட்டத்தல் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    தி.நகர் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

    இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலிசில் ராஜூ புகார் அளித்தார். மாணவியை வாலிபர் ஒருவர் காஞ்சீபுரம் அருகே கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக மாணவியை மீட்ட போலீசார் மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த தி.நகர் கக்கன் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுவையில் மழைக்கு ஒதுங்கி நின்ற போது தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பினர்.

    இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவரை தாக்கிய கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த பூனை மணியை (30) தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உருளையன்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த பூனை மணியை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    புதுவை அண்ணா சாலையில் மழைக்கு ஒதுங்கி நின்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த ஜெயபிரசாத் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அங்குள்ள ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்று ஜெயபிரசாத்தை தாக் கிய கும்பல் குறித்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஜெயபிரசாத்தை தாக்கியவர்கள் கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்த சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) மற்றும் பூனை மணி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கவியரசன், சாமிக்கண்ணு, பிரான்சிஸ் ரெமோ ஆகிய 3 பேரை கைது செய்தனர். பூனை மணியை தேடி வருகிறார்கள்.

    பெருந்துறையில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்த ஊழியர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு அவர் குடும்பத்துடன் தங்க வீடும் ஒதுக்கப்பட்டிருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு சுரேஷ் தங்கி வேலை பார்த்து வந்தார். சுரேசுக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி குடும்பத் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சுரேஷ் நேற்று தனது வீட்டு முன் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    ×