என் மலர்
நீங்கள் தேடியது "Property Tax Hike"
சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், மெட்டல் மணி, குமரேசன், குப்புசாமி,உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, பகுதி பொறுப்பாளர்கள் மார்க்கெட் மனோகரன், சேதுராமன், கோவிந்தராஜ், மற்றும் மகளிர் அணி மீனா லோகு, நிர்வாகிகள் முருகவேல், கார்த்திக் செல்வராஜ், மகுடபதி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர்கள் திருமலை ராஜா, கேபிள் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி, தினேஷ், டாக்டர் கணேஷ், கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சொத்துவரி உயர்வுக்கு எதிராககோஷம் எழுப்பபட்டது. முன்னதாக கார்த்திக் எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறியதாவது-
தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் படி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சொத்துவரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தாலும் கூட வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லைஎன்றால் மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்றார்.
சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் செயலாளர் மேங்கோ பழனிசாமி, இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், வெங்கடேஷ் உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். #DMK
ஈரோடு:
சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்சத், பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகி கே.சி. பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கியது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
தமிழகத்தில் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தில் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் மந்திரியின் செயல்பாடு கூட தவறு என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

கவர்னர் ஆய்வை எதிர்த்து மு.க.ஸ்டாலின், அவரிடம் ஏன் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்? தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆதரிக்கிறோம். என்னுடைய பார்வையில் அரசு நன்றாகத்தான் செயல்படுகிறது. ஒருசில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.
லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது பெருமையான விஷயமாகும்.
சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணி வருமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #PropertyTax
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற அதிமுக அரசு சொத்து வரியை 50 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை இந்த என்கவுண்டர் எடப்பாடி அரசு ஏற்படுத்தி உள்ளது.
சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு, வாடகையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.
மேலும் வாடகை உயர்வால் வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்யும் பொருளின் மீது கூடுதல் விலையை ஏற்றி, விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலை உருவாக்க காரணம் என்ன?
கையாலாகாத அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை இன்னமும் பெற முடியாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுபடுத்த முடியாத நிலையிலும், ஆளும் அ.தி.மு.க. அரசு சொத்துவரியை மட்டும் உயர்த்தி வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் வண்ணம் மக்களை சொல்லொணாத் துயரத்தில் இந்த நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க. அரசு தள்ளியிருக்கிறது.

மேலும் இங்கு உள்ளாட்சி அமைப்புகளினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்தந்த இருப்பிடத்திற்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இங்கு இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படாத நிலையில், அதிகாரம் உள்ளவர்களே இல்லாது மக்களுக்கு நெருக்கடியான துன்பத்தை தருக்கின்ற எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது.
எனவே அதிகாரமே இல்லாது அவசரகால நெருக்கடியில் சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மக்களை நெருக்குகின்ற சொத்து வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தவறும் பட்சத்தில் மக்களுக்கான களத்தில், போராட்டம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தே.மு.தி.க. இறங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, ஏற்கனவே பல நெருக்கடியில் உள்ள தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth #ChennaiCorporation #PropertyTax
திருச்சி:
முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்திய அ.தி.மு.க. அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வருகிற 27.7.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, துறையூர் நகராட்சி ஆகிய நகராட்சி அலுவலகங்கள் முன்பு (காவல்துறை அனுமதிக்கும் இடம்) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதமும், வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு விடப்படும் கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களையும் பாதிக்கக்கூடிய செயலாகும்,
கடந்த 9-ந் தேதி வரை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் வீட்டு வரி உயர்வு குறித்து எந்தவிதமான முன் அறிவிப்பும் வெளியிடப்படாமல் திடீரென இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி போயுள்ளது, இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் கருத்து கூறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் நிர்வாக உத்தரவில் வீட்டு வரி உயர்த்தியுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும்.
இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்து கேட்க போவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, இந்த வீட்டுவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
எனவே மக்களை மேலும் வாட்டி வதைக்கும் இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.