என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PUBG"
- சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார்.
- பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மும்பை:
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சீமாஹைதர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருணமத்திற்கு பிறகு கராச்சியில் குடியேறினார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்நிலையில் சீமாஹைதர் தனது கணவரை விட்டு விட்டு, காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தார். பின்னர் சீமாஹைதர் சச்சினுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சீமாஹைதரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.
மேலும் சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார். பின்னர் 7-ந் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சீமாஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். உருது மொழியில் பேசிய அவர், சீமாஹைதரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.
அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- இந்த கேமின் தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.
- ஆயுதங்களுடன் எதிரியை அழிக்க சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த ஆன்லைன் விளையாட்டு இது.
புதுடெல்லி:
தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது 2020ம் ஆண்டு பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு கேமிங் நிறுவனம் இணங்கிய பிறகு, மூன்று மாதத்திற்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த கேமுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அடுத்த 3 மாதங்களில் பயனருக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுகிறதா? பயனர்கள் அடிமையாகிறார்களா? என்பதுபோன்ற பிற விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி. இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்தோ சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு விளையாட வேண்டும். பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விளையாட்டு தேவையில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.
- பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிபான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயலிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கவுரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16).தனது தந்தையுடன் மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர்.
இதுகுறித்து சிலகளபுடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கவுரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர். இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan
Drop into #PUBG on PS4 for the first time LIVE with @IGN at 10AM PST TODAY. Watch Here: https://t.co/PcH5E1ElOxpic.twitter.com/4xLw4U1lpr
— PUBG (@PUBG) December 7, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்